செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்; நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்
-நமது நிருபர்-
மதுரை: செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.,) யங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் எல்லைகளைத் தாண்டிய தொழில்முனைவு என்ற தலைப்பில் தேசிய நிதித் தொழில் முனைவோர் உச்சிமாநாடு மதுரையில் நடந்தது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: இந்த தலை முறையினர் தயக்கத்தை தவிர்க்க வேண்டும். இன்று உங்களுக்கு அனைத்தும் இங்கு மிக எளிதாகி விட்டது. உங்களை என்ன தடுக்கிறது, எதற்காக தயக்கம். தொழில் செய்வதற்கான நாடு இந்தியா. எளிமையாக அணுக கூடிய அரசு உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொழில்களை வளர்க்கும் அமைப்பாக மாறியுள்ளது.
கடன் வழங்கி சிறு,குறு தொழில்நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கிறது. இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான அனைத்து தளங்களும் அனைத்து வாய்ப்புகளும் மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது. இளம் தொழில் முனைவோர் தயக்கமின்றி தொழில் தொடங்க முன்வர வேண்டும் மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும்' என்றார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
தொழில் முனைவோர் மாநாட்டில் நிர்மலா சீதாராமன் உரை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு உரையை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
சாங்காய் நகரில் நேற்று தொடங்கி ஜூலை 20 வரை நடைபெறும் உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு தான் உண்மையான தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆராய்ச்சியாளர்கள் பெரிய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் கூட தங்கள் பொருட்களை சாதனங்களை காட்சி படுத்துகிறார்கள். டெல்லியியல் நடைபெற்ற மாநாடு போல கூத்து போட்டிஷாட் அங்கு இல்லை
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தமிழ் நாட்டில் நடந்த ஊழலை கண்டுபிடிங்க
ஹி...ஹி...ஹி...ரொம்பவும் அப்பாவியா இருக்கீங்களே, கட்டுமர திருட்டு திமுகவினர் செய்த ஊழலை செயற்கை நுண்ணறிவால் கூட கண்டுபிடிக்கமுடியாது. ஊழல்களிலும் லஞ்சத்திலும் எழுபது வருடங்களாக செயற்கை நுண்ணறிவை காட்டிலும் கட்டுமர பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள் அவர்கள்.
இவ்வளவு திறமைகள் இருக்கும் நிர்மலா சீதாராமன் தேர்தலில் நின்றால் வெறும் பத்து ஓட்டுக்கள் கூட கிடைக்காது. அதுதான் மக்கள் செல்வாக்கிற்கும் தனி திறமைக்கும் இருக்கும் வித்தியாசம். இதெல்லாம் டெல்லி பாஜகவிற்கு புரிய இன்னும் இருபது வருடங்கள் ஆகலாம்.
அந்த நுண்ணறிவை நிர்மலா சீதாராமன் பயன்படுத்தி தமிழகத்தில் பாஜக ஏன் வளராமல் இன்னமும் நோட்டோவுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறது என்று கண்டுபிடித்து டெல்லி மேலிடத்திற்கு சொல்லலாமே. ஹி...ஹி...ஹி...அப்படியே சொல்லிட்டாலும். ஒரு சாதாரண மனிதனை கூப்பிட்டு கேட்டால் கூட சொல்லிவிடுவான் மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களை தலைவர்களாக போடுவதும் மற்றும் சாதிய ஆதிக்கமும் என்று. விளங்கிடும் தமிழக பாஜகவின் எதிர்காலம்.
AUTOMOBILES வந்த பின் - மனிதன் நடப்பதையும் உடலழைப்புயும் செய்ய மறந்தான். அதன் விளைவாக நோய்கள் நாளுக்குநாள் பெருகிக்கொண்டே
ARTIFICIAL INTELLIGENCE வந்தபின் - மனிதன் யோசிப்பதையும் மூளைக்கு வேலை கொடுப்பதையும் மறந்துவிடுவான்.
இந்தியாவில் ஏழைகளே இருக்கக்கூடாது.
சில பேருக்கு ஊருக்கு நல்லது செய்வதே வேலை
இப்போ மனப்பாடம் செய்வதை மக்கள் மறந்து செயற்கை நுண்ணறிவை நம்பி ..
படிப்பு வியாபாரம் ஆகிவிட்டது. அதுக்கு கட்டுற பீஸுக்கு ஒரு பெட்டிக்கடை டீ கடை வைத்து பிழைக்கலாம். இந்தியாவில் படித்தவரை விட படிக்காதவர் நல்லா சம்பாதிக்கிறார்.
நுண்ணறிவு இருக்கட்டும்.
முதலில் தமிழக பாஜகவை வளர்க்க பாருங்கள் என்றுதானே சொல்ல வந்தீர்கள். வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பே இல்லை. சாதிய ஆதிக்கம் தமிழக பாஜகவில் இருக்கும்வரையில் யார் தலைவராக வந்தாலும் இன்னமும் ஐம்பது வருடங்கள் ஆனாலும் நோட்டாவுடன்தான் போட்டி. ஹி...ஹி...ஹி...புரிந்தவன் புத்திசாலி.