பழநி நில மோசடி விவகாரத்தில் 100 சதவீதம் நடவடிக்கை; அமைச்சர் நிர்மல்குமார் உறுதி
மதுரை: பழநி நில மோசடி விவகாரத்தில் 100 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: பழநி கோவில் மோசடி வழக்கு விசாரணை விரிவுபடுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்; இதுபோன்ற பல இடங்களில் மோசடி பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது; அனைவரும் முன்வந்து புகார் அளிக்க வேண்டும். பழநி கோவில் நிலமுறைகேடு விவகாரத்தில் 100 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விவகாரத்தில் தவெக அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது. தவெக எம்எல்ஏக்களை வாங்கும் திமுகவின் நடவடிக்கை நேற்று வரை தொடர்கிறது. எம்எல்ஏக்களை வாங்க வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பணம் பிடிப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது. திருச்சி சிவா மத்திய அமைச்சராவார் என எந்த அடிப்படையில் கூறுகின்றனர். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
அய்யா நிர்மல் .. cm சொன்னமாதிரி உங்க அலுவல மாட்டும் பாருங்க. அந்தந்த டிபார்ட்மென்ட் மினிஸ்டர் பேசட்டும்.. . மைக் கிடைச்ச ஓஒ னு கத்தணும்னு அவசியம் இல்லை. எலக்ட்ரிகல் டிபார்ட்மென்ட் இளிச்சுகிட்டு இருக்கு.. என்னமோ சிறப்பா இருக்கிற மாதிரி .. அடுத்தவங்க வேலையில எப்போ பார்த்தாலும் மூக்கை விட்டுகிட்டு ..
தமிழ்நாட்டில் எந்த துறையாக இருந்தாலும் இவர் முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கொண்டு வியாக்கியானம் விளக்கம் பேசி திரிவது ஏன்? இதுவரை பேசியதில் பேசியதில் ஏதேனும் உருப்படியாக நடந்துள்ளதா? இவரை விட பாஞ்சு நாள் நாராயணசாமியே தேவல.
மோசடி பத்திர பதிவு தமிழகம் முழுவதும் உண்டு. சார் பதிவாளர் அலுவலக பத்திர பதிவு குறைபாட்டுக்கு டாக்குமெண்ட் எழுத்தர் முக்கிய காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை. மாவட்ட பதிவாளர் குறைபாடு உடைய பத்திரத்தை ரத்து செய்ய அதிகாரம் உடையவர். மதுரை உயர் கிளை வழக்கறிஞர்கள் நீதி மன்றம் தான் ரத்து செய்ய வேண்டும் என்று தீர்வு கண்டு, மாவட்ட பதிவாளர் உத்தரவை நிறுத்தி விட்டார்கள். நிர்வாகத்தில் நீதிமன்றம் வழக்கு இல்லாமல் நுழைந்து பணம் தேட வழி செய்தது திமுக ஆட்சி. மாவட்ட பதிவாளர் அலுவலகம் எதற்கு?
Is this minister is Cm?
Why this minister is interested in other department?
சரியாகச் சொன்னீர்கள்! இவர் முதல்வர் போல செயல் பட்டு முதல்வர் பெயரை கெடுக்கிறார்!
எடுக்கப்படும் எடுக்கப்படும்னு திரும்ப திரும்ப எல்லா அமைச்சர்களும் மைக்பிடிச்சு சரியா தான் சொல்லராங்க. இனிமே வெளியே தெரியாத மாதிரி எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவர் எந்தத்துறைக்கு அமைச்சர் ??
Law and Prevention of corruption departments come under him.So he is eligible to handle this and make comments
ஸ்டேட்மென்ட் தேவையில்லை. ஆவண செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோரை கைது செய்வதை நிறுத்திவிட்டு விரைவில் குற்றவாளிகளை கைதுசெய்து நீதியை பெற்றுத்தாருங்கள்
கதறல்....
கோயில் சொத்துக்கள் பக்தர்களின் சொத்து. சொத்துக்கு உரிமையாளர்கள் குறிப்பாய் ஹிந்து பக்தர்கள் எல்லா பிரிவினர்கள் சொத்து சூறையாடுவதை வேடிக்கை பார்த்துகொண்டுஇருப்பது வினோதம் ஆச்சரியமாய் உள்ளது. அரசு நடவடிக்கை எடுக்கும் நம்பிக்கையில் பக்தர்கள் கண் மூடியிருந்தால் யானை தன் தலையில் மண்ணை வாரி கொண்டதுபோல் ஆகும். திராவிட கட்சிகள் ஆட்சி எறியதிலிருந்து தெரிந்தும் தெரியாமலும் இந்த அவல நிலை
திருட்டு திராவிடம் தான் அடித்த கொள்ளையை மறைத்து மக்களை திசைதிருப்ப சிறிய பிரச்சனைகளை ஊதி பெரிதாக்கி வருகின்றனர். முதல்வர் விஜயின் அரசு சிறு தவறுக்கும் இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டும்.
மக்கள் அனைவரும் உங்களுடன் உள்ளனர். லஞ்ச ஊழல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுங்குங்கள். திருட்டு திராவிடம் காணாமலே போய்விடும். சேவை பெறும் உரிமை சட்டத்தை உடனடியாக நிறைவேற்றுங்கள்.
எப்படி வக்கீல் நியமனத்தில் ஊழல். கரூர் விவகாரம் மற்றும் ஊழல் சோபா ஏற்றுமதி ஊழல். etc.....