அரசு பஸ் - ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதல் 2 பேர் உயிரிழப்பு
நமது நிருபர்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அரசு பஸ் - ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
மதுரையை சேர்ந்த அசோக் மனைவி பிரியா குழந்தை ரிவந்த்திகா (5) மற்றும் கிருஷ்ண வேணி (60) உள்ளிட்ட 7 பேர் ஷேர் ஆட்டோவில் சாமி கும்பிட திருப்புவனம் வழியாக மானாமதுரை நோக்கி சென்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூர் அருகே செல்லும் போது எதிரே ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் 5 வயது குழந்தை ரிவந்திகா, கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement