வீட்டை விட்டு சென்ற முதியவர் சடலமாக மீட்பு

புதுச்சத்திரம்,:சேலம், முத்துநாயக்கன்பட்டி, காரைச்சாவடியை சேர்ந்தவர் தனபால், 33; லாரி பாடி கட்டும் தொழிலாளி. இவரது தாத்தா சாந்தப்பன், 76. கடந்த, 12ல், சாந்தப்பன் உறவினர்களை பார்த்து வருவதாக தனபாலிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார்.

வழக்கமாக அவ்வப்போது வெளியே சென்று, இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்புவது வழக்கம் என்பதால், தனபால் அவரை தேடவில்லை. ஆனால், வீட்டை விட்டு வெளியேறிய சாந்தப்பன், மீண்டும் வீடு திரும்பவில்லை.
நேற்று முன்தினம், புதுச்சத்திரம் அடுத்த எஸ்.உடுப்பம், கொசவம்பட்டியில் உள்ள கிறிஸ்தவ கல்லறை அருகே சாந்தப்பன் இறந்து கிடப்பதாக தனபாலுக்கு தகவல் கிடைத்தது. அங்கிருந்தவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை கொண்டு சென்றனர். இதுகுறித்து தனபால் அளித்த புகார்படி, புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.

Advertisement