அம்மன் வேடத்தில் திரிஷா; பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு
ஆத்துார்: சேலம் மாவட்டம், ஆத்துார் பெரிய மாரியம்மன் கோவிலில், ஆடி திருவிழா நேற்று தொடங்கியது. இதற்காக, ஆத்துார் பயணியர் மாளிகை பகுதியில், முதல்வர் விஜய் படத்தின் பின்னால், ராவணன் தலை இருப்பது போன்றும், அம்மன் வேடத்தில் நடிகை திரிஷா இருப்பது போன்றும் பேனர் வைத்திருந்தனர்.
இந்த பேனரால் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, திரிஷா படம் இருந்த இடத்தில், வேறு ஒரு பெண், அம்மன் வேடத்தில் இருப்பது போன்ற படத்தை, த.வெ.க.,வினர் ஒட்டி வைத்தனர்.
இந்நிலையில், தகவலறிந்த ஆத்துார் டவுன் போலீசார், பொது மக்களுக்கு இடையூறாக பேனர் வைத்துள்ளதாக கூறி, அதை அகற்றினர்.
தொடர்ந்து, பேனர் அச்சடித்த கடை உரிமையாளரான தலைவாசலை சேர்ந்த கோகுல், பேனர் வைத்த ஆத்துாரை சேர்ந்த சந்துரு ஆகியோர் மீது, அனுமதி பெறாமல் விளம்பர பதாகை வைத்தல், இடையூறு ஏற்படுத்துதல் உட்பட இரு பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இவனுக எல்லாம் திருந்தவே மாட்டானுகளா? சினிமா எந்த அளவுக்கு மக்களை சீரழித்துள்ளது என்பதற்கு TVK வெற்றியே சாட்சி. இவனுக இப்படியே பண்ணுவதை தான் விஜய்யும் எதிர்பார்க்கிறார். இப்படியே ஆடுங்கடா 2031 இல் பெரிய ஆப்பு ரெடியா இருக்கு.
ஆனால் ஒரு சிறிய ஆறுதல் இரண்டு திருட்டு திராவிட கட்சிகளை வீட்டுக்கு அனுப்பியாச்சு.
அப்போ முதலில் தண்டிக்கப்படவேண்டியது நடிகை பத்மினி யம் கே ஆர் விஜாயா யாவும் தான் என்ன அவங்கதான் நிறைய படங்களில் பத்ரகாளியாக சிவன் மனைவி பார்வதியாக நடித்து போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கும் என்ன செய்வது அப்போது எல்லாம் மதத்தை வைத்து காசு பார்க்கும் அரசியல் வயிறு வளர்க்கும் கும்பல் எல்லாம் இல்லை
தஞ்சை மன்னரே,
மக்களுக்கு அப்போதைக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. ஏன் மாதா போட்டோவை போடா வேண்டியது தானே? இப்படியே செய்தால் 2031 ல் செருப்படி நிச்சயம்
இந்த மதத்தை மட்டும் ஏளனம் செய்து காசு பார்க்கும் சினிமா கூட்டம் இருந்ததால் தான் அரசியல் கூட்டம் தானாக உருவானது.
சோறு சாப்பிடுங்க வேற ........
அம்மன் வேடத்தில் த்ரிஷாவா ? என்ன கொடும
அப்படியே திராவிட மாடல் பாரம்பரியம் ........மேலும்
-
போனை ரீசார்ஜ் பண்ணும் நாம் மனசை ரீசார்ஜ் பண்ணுவதில்லை!
-
நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிப்பது அவசியம்; அரசியலாக்க வேண்டாம் என்கிறார் கிரண் ரிஜிஜூ
-
அணைகள் நீர்மட்டம்
-
போஸ்டர் ஒட்டுவதை தடுக்க இப்படியும் ஒரு அழகான வழி!
-
தூத்துக்குடியில் போலீஸ் விசாரணைக்காக சென்றவர் மர்ம மரணம்
-
பார்லியில் நீட் தேர்வு குறித்து விவாதிக்க வாருங்கள்; ராகுலுக்கு பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் சவால்