இந்தியா-பிரிட்டன் இடையிலான உறவுகள் வலுப்பெறும்; புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து
நமது நிருபர்
இந்தியா-பிரிட்டன் இடையிலான பொருளாதார உறவுகள் மேலும் வலுவடையும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் புதிய பிரதமராகத் தொழிலாளர் கட்சியின் தலைவரான ஆன்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்றுள்ளார். இந்தியப் பிரதமர் மோடி, பர்ன்ஹாம் பிரதமராகப் பதவியேற்றதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற ஆன்டி பர்ன்ஹாமுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும், பிரிட்டனும் நல்ல உறவை கொண்டுள்ளன.
இரு நாடுகளுக்கு இடையே அமலுக்கு வந்துள்ள வர்த்தக ஒப்பந்தம் (CETA) மூலம், இந்தியா-பிரிட்டன் இடையிலான பொருளாதார உறவுகள் மேலும் வலுவடையும். பொருளாதார உறவுகள் இன்னும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உறவுகள் வலுப்படும் முன் இன்னொரு பிரதமர் வந்து விடுவார்!
மூணு மாசம் கழிச்சு இன்னொரு பிரதமர் வருவாரு. அது உறுதி
பிரதமர் சீட் காலி இருப்பதை அறிந்துதான் ஒருத்தர் லண்டன் போயிட்டு வந்தார், ஆக அடுத்தவர் பிரதமர் அவருதான்..
சரியாகச் சொன்னீர்கள்! நடந்தாலும் நடக்கும்! பதவி இல்லாமல் புலம்பல் அதிகமாகிவிட்டது! எனவே இந்தப் பதவியையாவது ஒரு ஆறுதலுக்காக கொடுக்கலாம்! வெள்ளைக்காரர்கள் சந்தோஷமாக பொழுது போக்கட்டுமே!மேலும்
-
சின்னசேலம் பேரூராட்சி அலுவலகத்தில் ‘ரெய்டு’ அலுவலக ஊழியர்கள் 2 பேர் மீது விஜிலென்ஸ் வழக்கு
-
கார் வாங்கி தருவதாக ரூ.3.69 லட்சம் மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
-
அலைபேசி பறிப்பு
-
காவிரி நீர் பங்கீடு, மேகதாது திட்டம் விஜய்க்கு கர்நாடகா அழைப்பு?
-
வெள்ளை யானையில் எழுந்தருளிய சுந்தரர்
-
‘சாகர் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை போலி பயங்கரவாதிகள் சிக்கினர்