'துரோகிகள் படை நம்மை சூழ்ந்துள்ளது': பழனிசாமி பேச்சு

5

மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இது குறித்து, கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள், 'பா.ஜ.,வுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கியது தவறு. ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க., நின்றிருந்தால் வெற்றி பெற்று இருப்போம்.

நம் கட்சிக்குள்ளேயே, தி.மு.க., ஆதரவாளர்கள் இருக்கின்றனர். அவர்களால் தான் நாம் தொடர்ச்சியாக தோல்வி அடைகிறோம்' என்றனர்.

இதற்கு பதிலளித்த பழனிசாமி, 'தோல்வியில் இருந்து மீள்வது அ.தி.மு.க.,வுக்கு கைவந்த கலை. ஆனால், கட்சிக்குள் துரோகிகள் படை, நம்மை சூழ்ந்து இருக்கிறது. அவர்களை அடையாளம் கண்டு 'களை' எடுத்தால் தான், அ.தி.மு.க., வெற்றி அடையும். உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்துங்கள்.

'கூட்டணி இல்லாமல், தி.மு.க., பலவீனமாக இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினால், நிச்சயம் நாம் வெற்றி அடைவோம்' என்றார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement