கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பது கண்டிக்கத்தக்கது; மத்திய அரசு கண்டனம்

2


நமது நிருபர்




கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதும் கண்டிக்கத்தக்கது என மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: உக்ரைனின் ஒடெசா துறைமுகத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்த எம்.வி. கோல்டன் லியோ என்ற கப்பல் தாக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த நேரத்தில், 5 இந்தியர்கள் உட்பட 17 பணியாளர்கள் கப்பலில் இருந்தனர்.

நான்கு இந்தியர்கள் துயரமான முறையில் உயிரிழந்து உள்ளனர், மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் இந்த நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்த இந்தியர் விரைவில் முழுமையாகக் குணமடையவும் பிரார்த்திக்கிறோம். இத்தகைய தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது.

மேலும், வர்த்தகக் கப்பல்களைக் குறிவைப்பதும், அப்பாவிப் பொதுமக்களான கப்பல் ஊழியர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதும், கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகச் சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிப்பதும் கண்டிக்கத்தக்கது. அவை தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

Advertisement