சட்ட விரோதமாக மண் அள்ளும் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா?
தமிழக முழுவதும் கனிமவளத் துறையில் முறைகேடு நடக்கக் கூடாது ஊழல் புரிய கூடாது என அத்துறையை சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டு உள்ளார். ஆனால் அதிகாரிகள் திமுக ஆட்சியில் நடத்திய முறைகேடுகளை தற்போதும் தொடர்ந்து வருகிறது என இயற்கை வளம் பாதுகாக்கும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அருங்குன்றம் கிராமத்தில் செங்கல்பட்டு மாவட்ட சுரங்க மற்றும் கனிமவளத் துறையால் குத்தகை தாரருக்கு 20 ஆயிரம் கன மீட்டர் சவுடு மண் மட்டுமே எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதற்கான அரசு ராயல்டி தொகையும் செலுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிகமாக நான்கு லட்சம் கன மீட்டர் சவுடு மண் சட்ட விரோதமாக வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் வாயிலாக அரசுக்கு ரூபாய் பத்து கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக தினமும் சவுடுமண் அள்ளி வருவதால் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பாக ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக நேரடி ஆய்வு மேற்கொண்டு உண்மையான அளவை கணக்கீடு செய்து சட்ட விரோதமாக மண் அள்ளுபவர்கள் மட்டும் அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் விஜய்க்கு சமூக ஆர்வலர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.