இன்ஸ்டாகிராம் மூலம் போலி பட்டு சேலை விற்றவர் கைது

காஞ்சிபுரம், ஜூலை 23–

இன்ஸ்டாகிராம் மூலமாக, போலி பட்டு சேலை விற்பனை செய்தவரை, சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்திக், 35. இவர், காஞ்சிபுரம் காமாட்சிம்மன் காலனி பகுதியில், தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளார். இவர், காஞ்சிபுரம் நடுத்தெருவில், பிரபல பட்டு சேலை கடையின் பெயரை பயன்படுத்தி, தன் பெயரில் இன்ஸ்டா கிராம் என்னும் சமூக வலை தளத்தை தொடக்கி உள்ளார்.

இந்த இன்ஸ்டாகிராம் முகவரியை பயன்படுத்தி, சேலத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் 7,000 ரூபாய்க்கு காஞ்சி பட்டு சேலைக்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.

கார்த்திக் என்பவர், 2,300 ரூபாய் மதிப்புள்ள போலி பட்டு சேலையை கூரியர் மூலமாக அனுப்பி உள்ளார். பட்டு சேலை வாங்கிய பெண்மணி, சம்பந்தப்பட்ட கடையை தொடர்புக் கொண்டு பேசிய போது, நாங்கள் பட்டு சேலை ஏதுவும் கூரியர் மூலமாக அனுப்பவில்லை என, கூறிவிட்டனர்.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பெண், சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட இன்ஸ்டா கிராம் முகவரியை பயன்படுத்தி, சைபர் கிரை போலீசார் கார்த்திக் என்பவரை நேற்று கைது செய்து, வேலுார் சிறையில் அடைத்தனர்.

Advertisement