பிரசவத்தில் பெண் இறப்பு குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம்
சென்னை ஜூலை 23–: திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் மனைவி ஜோதி, 37, பிரசவத்திற்காக, சோழம்பேடு சாலையில் உள்ள ‘செர்ரீஸ்’ தனியார் மருத்துவமனையில், இம்மாதம் 16ல் சேர்க்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சையில் ஆண் குழந்தை பிறந்தது.
ஆனால், அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வேறு மருத்துவமனையில் சேர்க்கபட்ட ஜோதி, சிகிச்சை பலனின்றி, 17ம் தேதி உயிரிழந்தார்.
அறுவை சிகிச்சையில் நடந்த தவறால்தான் ஜோதி இறந்ததாக கூறி, அவரது குடும்பத்தினர் திருமுல்லைவாயில் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அதிருப்தியடைந்த அவர்கள் நேற்று, போலீசாரை கண்டித்தும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், கோஷங்கள் எழுப்பியபடி, தலைமைச் செயலகம் முன் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கிருந்த போலீசார், அவர்களிடம் சமரச பேச்சு நடத்தி திருப்பி அனுப்பினர்.
மேலும்
-
முதல்வர் பேனர் அகற்றம் கடலுார் மாநகராட்சி அதிரடி
-
வராகி அம்மனுக்கு மூல மந்திர யாகம்
-
நிதி கல்வியறிவை உயர்கல்வியுடன் ஒருங்கிணைப்பது அவசியம் புதுச்சேரி பல்கலை துணைவேந்தர் பேச்சு
-
வரதட்சணைக்காக கர்ப்பிணி கொடுமை கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு
-
அரசு பொறியியல் கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
-
மஸ்ட் 8 ஆண்டுகளுக்கு பின் நடந்த திருப்புவனம் வாரச்சந்தை ஏலம்