போனை ரீசார்ஜ் பண்ணும் நாம் மனசை ரீசார்ஜ் பண்ணுவதில்லை!
மனதை ரீசார்ஜ் செய்து புத்தம் புதிதாக மாற்றுகிறது கோவை வெல்நெஸ் கம்யூனிட்டி.
கோவையை சேர்ந்த டாக்டர் பாரதி ஆரம்பித்த இந்த அமைப்பு, தற்போது இளம் தலைமுறையினரிடையே ஒரு, உணர்வுபூர்வமான, பாதுகாப்பான கூடு ஆக மாறி வருகிறது.
சிங்கப்பூர், ஜப்பான், சீனாவில் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழும் வாழ்வை, இங்கும் வாழ முடியாதா என்ன என்ற கேள்விதான், அவரை இப்படி ஒரு அமைப்பை துவங்க வைத்தது என்கிறார் அவர்.
‘‘மனிதர்களை சக மனிதர்களுடன் இணைத்தாலே ஸ்ட்ரெஸ் ஓடி விடும்’’ என்று அடித்துப்பேசுகிறார்.
“சாதாரண போனை ரீசார்ஜ் பண்ணும் நாம், என்றாவது அதே போன்றதொரு ரீசார்ஜ் நம் மனதுக்கும் தேவை என்பதை உணர்ந்திருக்கிறோமா...?’’ என்று அர்த்தமுள்ள ஒரு கேள்வியை நம் முன் வைக்கிறார்.
‘அட, ஆமா இல்ல...’ என்று உணர்ந்த பலர், இன்று இந்த அமைப்பில் சேர்ந்து மன அழுத்தத்தை துாக்கி துார வீசி, வாழ்க்கையை கொண்டாடுகின்றனர். இந்த கருத்தை மையமாக வைத்து, இதுவரை 25க்கு மேற்பட்ட சந்திப்புகள் நடந்து விட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
இவர்கள் அனைவரும் ஒரு இன்று ஒரு குடும்பமாக மாறியுள்ளனர். இங்கே வயது, தொழில், அந்தஸ்து எதுவும் முக்கியமில்லை.
15 முதல் 50 பிளஸ் வயதுள்ள பலரும் மனதை திறந்து கொட்டுகிறார்கள். ‘அப்பாடா’ என ரிலாக்ஸ் ஆகிறார்கள்.
தனிமை, மன அழுத்தம், உறவுகளில் சிக்கல், பணியிட அழுத்தம், மனச்சோர்வு, படபடப்பு, பயம்...இப்படி அனைத்தையும் பகிர்வதால் மனம் லேசாகிறது.
தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பின்றி பிரச்னைகளை பகிர வேண்டும் என்பதுதான் முக்கியம்.
‘‘இந்த அமைப்பை பாதுகாப்பாக உணர்கிறோம். மனதில் அந்த வசதியை பீல் பண்ண முடிகிறது. அதே நேரம் தனிப்பட்ட தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்பதுதான் பெரிய ஆறுதல்’’ என்கிறார் ஜிவி எனும் ஐ.டி.,ஊழியர்.
இந்த பாசிட்டிவ் வைப்ரேஷன்தான் இந்த அமைப்பின் பலம்.
@block_B@ ரிலாக்ஸ் தரும் ‘டான்ஸ் தெரபி’ Meetup முடிவில் live music, band session, dance therapy போன்ற activities மூலம் people relax ஆக feel பண்ணுவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் craft workshops, financial awareness, sex education sessions, psychologist interactions போன்ற trending wellness activities-களும் நடத்தப்படுகின்றன. “Digital Detox” என்ற பெயரில் கோவை அருகிலுள்ள இயற்கை இடங்களுக்கு trips-மும் நடத்தப்படுகின்றன. Mobile phone-ஐ விட்டு nature-உடன் reconnect ஆகும் இந்த முயற்சி, சமீபத்திய feel-good திரைப்படங்களில் வரும் “green community lifestyle” போலவே இருப்பதாக இளைஞர்கள் கூறுகின்றனர். “Likes-ஐ விட life important…Online friends-ஐ விட real மனிதர்கள் important…” சமூக சேவைகள், NGO activities மூலமும் Untangle Wellness தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.“மக்கள் சந்தோஷமாக இருந்தால்தான் society healthy ஆகும்” என்பதே பாரதியின் நோக்கம். இன்று stress, anxiety, loneliness அதிகரித்து வரும் காலத்தில்…கோவையில் “Untangle Wellness” பலரின் வாழ்க்கையை மெதுவாக untangle செய்து வருகிறது.block_B
மேலும்
-
பிரதமர் இல்லம் முன் காங்கிரஸ் நடத்திய போராட்டம் நேர்மையற்றது: சோனம் வாங்சுக் மனைவி விமர்சனம்
-
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
-
துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு முகாம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது
-
ரோட்டை சீரமைக்காததால் வாகன ஓட்டுநர்கள் அவதி
-
‘இளைஞர்கள் காந்திய சிந்தனையை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்’
-
38 ஊராட்சிகளை பசுமையாக்க 25,000 மரக்கன்றுகள் வளர்ப்பு