பார்லியில் நீட் தேர்வு குறித்து விவாதிக்க வாருங்கள்; ராகுலுக்கு பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் சவால்
புதுடில்லி: பார்லிமென்டில் நீட் தேர்வு குறித்து விவாதிக்க வாருங்கள் என காங்கிரஸ் எம்பி ராகுல் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் நிதின் நபின் கூறியதாவது: காங்கிரஸ் எம்பி ராகுல், எதிர்க்கட்சியினர் நீட் தேர்வு உள்ளிட்ட மாணவர்கள் பிரச்னைகளை பார்லிமென்டில் முன்வந்து விவாதிக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து அனைத்து மட்டங்களிலும் விவாதிக்க தேஜ கூட்டணி அரசு முழுமையாக தயாராக உள்ளது.
இருப்பினும் ராகுல், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளும் இந்த விவாதத்தில் இருந்து ஒதுங்கி நிற்கின்றன. விவாதிக்க அவர்கள் சபைக்கு வந்தால் அவர்களின் இரட்டை வேடம் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் அம்பலமாகிவிடும் என்பது அவர்களுக்கு தெரியும். ராகுலின் அரசியல் பிம்பம் ஒரு தப்பியோடியவரின் பிம்பமாகவே இருந்து வருகிறது. பாஜ எம்பிக்களும், தேஜ அரசும் ஒவ்வொரு பிரச்னையையும் விவாதிக்கவும் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கவும் தயாராக இருக்கின்றன.
50-60 ஆண்டுகளாக இளைஞர்களை ஏமாற்றுவது, தூண்டிவிடுவது மற்றும் தவறாக வழிநடத்துவது போன்ற நீண்ட வரலாறு காரணமாக ராகுலும், காங்கிரசும் பேச்சுவார்த்தக்கு முன்வர மாட்டார்கள். பிரதமர் மோடி தலைமையிலான தேஜ கூட்டணி அரசு, இளைஞர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதில் உறுதியாக உள்ளது. இவ்வாறு நிதின் நபின் கூறினார்.
புத்தி இல்லா மந்திரி . பார்லிமென்ட் ல பேசணும் என்று கேட்கும்போது முடியாது என்று ஸசொன்னதால் தான் ராகுல் பிரதர் ஆபீஸ் க்கு சென்று முற்றுகை இட்டார். நீங்கள் அவரையும் அடித்து தூக்கி எறிந்தீர் .அவர் இன்று சொல்வது மாணவர்கள் கோரிக்கையான மந்திரி நீக்கம் என்பது முதல் கண்டிஷன். புத்தி இருக்குமா இந்த கொல்லை கொலை கோஷ்டி பிஜேபி க்கு
பிஜேபி தலைவர் சரியாகச் சொன்னார். காங்கிரஸ் ஒவ்வொரு முறை போராட்டம் செய்யும் போதும் பார்லிமெண்ட்டை முடக்கி வாத விவாதங்களுக்கு வரும் போது அதை எதிர்கொள்ள முடியாமல் எக்ஸ்போஸ் ஆனது தான் மிச்சம். இவர்கள் செய்தது மொத்தமுமே நாட்டுக்கு எதிர் வேலை. இப்போது இன்னும் அதிகம். முன்பு மீடியா இல்லாததால் எல்லாவற்றையும் மறைக்க இயலும். இப்போது எதையும் மறைக்க இயலாது. அதனால் மீண்டும் பாராளுமன்றத்தில் அவமானப் பட விரும்ப மாட்டார்கள். இவர்களுக்கு பிஜேபியிடம் இருந்து பதில் தேவையில்லை. நாடு அமைதியாக இருக்கக் கூடாது என்பதில் கருத்தாக இருக்கிறார்.
The present agitation is under the cover of NEET pro, is only to bring down Modi government. Some one should tell my fellow Indians, the truth behind this unruly agitation. Wonder who are their sponsors, and who pays them to vandalize India / properties.
காங்கிரசுக்கும் போலி காந்தி கூட்டத்திற்கும் இந்தியா முன்னேறுவதில் விருப்பமில்லை. இந்தியாவை அடிமையாகவே வைத்திருந்து எல்லாமே நேருவும் இவர்களும் செய்தது போலவும், வேறு எவனும் நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை என்று போலி பிம்பத்தை உருவாக்க நினைக்கிறார்கள். இவர்களுக்கு ஆளவும் தெரியவில்லை. எதிர்கட்சியாகவும் இருக்க தகுதி இல்லை.
தற்போது நடைபெற்று வரும் போராட்டத்திற்கும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு அல்லது மாணவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவின் மோடி அரசைப் பதவியிலிருந்து நீக்குவதற்காக, காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் Deep State போன்ற நாசகார சக்திகளின் வெளிநாட்டு நிதியுதவியுடன் நடத்தப்படும் ஒரு போராட்டமாகும். அவர்கள் நீட் தேர்வை ஒரு சாக்காகப் பயன்படுத்துகிறார்கள். எனவே வளர்ந்த பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அணுகி, இதுபோன்று தெருக்களில் நடக்கும் சட்டவிரோத Gen Z நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். காங்கிரஸின் ராகுல்காந்தி, பிரியங்காவதேரா போன்ற அரசியலில் செல்வாக்கு மிக்கவர்கள், வன்முறை மற்றும் கலவரத்தில் ஈடுபடும் ரவுடிக் கும்பல்களுடன் தெருப் போராட்டங்களில் சேருமாறு அவர்களைத் தூண்டுகிறார்கள். நிலைமை சீரானதும், அந்நிய கைக்கூலிகளான அந்த ரௌடிகள் மீண்டும் உதட்டசைவு மற்றும் ட்வெர்க்கிங் செய்ய தங்கள் மறைவிடங்களுக்குத் திரும்பிவிடுவார்கள். இதற்கிடையில், தங்களை ஒரு புரட்சியின் அங்கம் என்று நினைத்து வன்முறையில் சிக்கிக் கொள்ளும் உங்கள் பிள்ளைகள், முதல் தகவல் அறிக்கைகள் (FIR), சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA), தேசியப் பாதுகாப்புச் சட்டம் (NSA), முடிவில்லாத ஜாமீன் நிராகரிப்புகள், கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுதல் மற்றும் பாழான எதிர்காலம் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 140 கோடி மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய ஒரு ஜனநாயக நாட்டில் டீப் ஸ்டேட் போன்ற வெளிநாட்டு விஷமிகள் நடத்தும் இதுபோன்ற வன்முறைக்கு நமது பிள்ளைகளை இடமளிக்க விடக்கூடாது.
ராகுல் ஒரு வேலைவெட்டி இல்லாத 50 வயதை கடந்த இளைஞன். அவர் அப்பா, தாத்தா, பாட்டி சேர்த்து வைத்த சொத்தில் உயிர் வாழ்கிறார். இவனர் இளைஞன் என்று சொல்லிக்கொண்டு படித்து வேலைக்கு போகும் இளைஞர்களை கூட்டி, அவர்களை ஏமாற்றி போராட்டம் செய்கிறார். இன்றைய இளைஞர்கள் அதை நன்றாக உணர்ந்து, இவர் பின் செல்லாமல், நீட் தேர்வின் உண்மையை அறிந்து போராட்டத்தை கைவிடவேண்டும். ராகுலை முற்றிலும் புறக்கணிக்கவேண்டும்.
நேருக்கு நேர் விவாதிக்கும் அளவுக்கு அவருக்கு அறிவில்லை, அறுகதையுமில்லை. மீறி அழைத்தால் புறமுதுகிட்டு ஓடி சென்று ஊரில் உள்ள அணைத்து சமூகவிரோதிகளையும் ஒன்று திரட்டி அராஜகம் அட்டூழியம் செய்வார். இவர் இருக்கும் வரை இது தொடரும். இதற்கு முடிவு???????
விவாதிக்க என்ன இருக்கிறது? அன்று போலி விவசாயிகளை வைத்து விவசாயிகள் போராட்டம் செய்தவர்கள், இன்று அது எடுபடாது என்று தெரிந்து, போலி மாணவர்களை வைத்து போராட்டம் செய்கிறார்கள். அவர்களை சரியாக முட்டிக்கு முட்டி தட்டினால் போராட்டம் முடிவுக்கு வரும். இவர்கள் வைத்திருக்கும் அந்த காந்தி என்கிற பெயரே போலிதானே... இவர்கள் என்ன அந்த மஹாத்மா காந்தியின் வம்சாவளியில் பிறந்தவர்களா... ?
படிப்பதனை பற்றி பேச ஒரு கோமாளியை கூப்பிட்டால் எப்படி?மேலும்
-
பிரதமர் இல்லம் முன் காங்கிரஸ் நடத்திய போராட்டம் நேர்மையற்றது: சோனம் வாங்சுக் மனைவி விமர்சனம்
-
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
-
துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு முகாம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது
-
ரோட்டை சீரமைக்காததால் வாகன ஓட்டுநர்கள் அவதி
-
‘இளைஞர்கள் காந்திய சிந்தனையை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்’
-
38 ஊராட்சிகளை பசுமையாக்க 25,000 மரக்கன்றுகள் வளர்ப்பு