போஸ்டர் ஒட்டுவதை தடுக்க இப்படியும் ஒரு அழகான வழி!
கோவை: நகரின் அழகை பாழ்படுத்தும் விதமாக அரசியல் கட்சியினர், தனியார் நிறுவனத்தினர், பல்வேறு அமைப்பினர், இஷ்டத்துக்கு போஸ்டர் ஒட்டுகின்றனர். மக்கள் முகம் சுழிக்கின்றனர். வாகன ஓட்டிகள் கவனம் சிதறுகிறது.
போஸ்டர் ஒட்டுவதை முறைப்படுத்த திட்டமிட்ட மாநகராட்சி, 100 வார்டுகளில் 101 இடங்களை தேர்வு செய்தது. மாநகராட்சி முன்அனுமதி பெற்று போஸ்டர் ஒட்டலாம் என்ற திட்டத்துக்கு, தி.மு.க. கவுன்சிலர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். அதற்கான தீர்மானத்தை மன்றத்தில் நிறைவேற்ற விடாமல் தடுத்து விட்டனர்.
இருந்தாலும் எந்தெந்த இடங்களில் போஸ்டர்கள், அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் எழுதப்படுகின்றன என்பதை பட்டியலிட்டுள்ள அதிகாரிகள், துாய்மை பணியாளர்களை பயன்படுத்தி போஸ்டர்களை கிழிக்கின்றனர். அவ்விடங்களில் மீண்டும் ஒட்டுவதை தடுக்க, அழகான ஓவியங்கள் வரையப்படுகின்றன.
முதல்கட்டமாக, மண்டலத்துக்கு 5 இடங்கள் வீதம் 25 இடங்களில் ஓவியங்கள் வரையப்படுகின்றன. மற்ற மண்டலங்களிலும் வரையப்பட உள்ளன.
அதெல்லாம் சரி... இந்த ஓவியங்கள் மீதே போஸ்டர் ஒட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?
அந்த ஓவியத்திற்கு ஆன செலவும் அதனுடன் மீண்டும் ஓவியத்திற்கு ஆகும் செலவையும் மற்றும் அபராதத்தையும் சேர்த்து அவர்களிடம் வசூலிக்க வேண்டும்.மேலும்
-
பார்லிமென்ட் முடங்கியதால் நிமிடத்திற்கு ரூ.2.5 லட்சம் வீண்!: நாளை முதல் இரு சபைகளும் சுமுகமாக நடக்குமா?
-
'செல்பி' எடுத்தார் பிரதமர் மோடி!
-
கட்டடம் இங்கே... 'கரன்ட்' எங்கே...: ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவதி
-
ஒரு சொட்டு நீர்கூட வராத ஓடையை துார்வார ரூ.5.25 கோடி
-
அடுத்தடுத்து மோதிய 7 வாகனங்கள் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
-
'ஹாக்கி விளையாட்டை ஊக்குவிப்பதில் ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது'