மருத்துவமனையில் சோனம் வாங்சுக்கை சந்தித்து நலம் விசாரித்த மத்திய அமைச்சர்கள்
புதுடில்லி: டில்லியில் சிஜேபி இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை மத்திய அமைச்சர்கள் நேற்று சந்தித்து பேசினர்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, தலைநகர் டில்லியில் 'காக்ரோஜ் ஜனதா பார்ட்டி' என்ற இயக்கத்தினர் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். பார்லியை முற்றுகையிட முயன்ற போது ஏற்பட்ட வன்முறையால், போராட்டக்களம், போர்க்களமாக மாறியது.
இந்த நிலையில், சிஜேபி இயக்கத்தின் கோரிக்கைக்கு ஆதரவாக டில்லியில் 21 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்தர் சிங் ஆகியோர் நேரில் சென்று சந்தித்துள்ளனர்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போதிலும் போராட்டத்தை தொடர்ந்த அவரை, டில்லி போலீசார் வலுக்கட்டாயமாக சப்தர்ஜூங் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் வாங்சுக், டில்லி உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த சூழலில் அவரை மத்திய அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, அவரது உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளனர்.
டில்லி ஜந்தர் மந்தரில் கடந்த 32 நாட்களாக சிஜேபி இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தனியார் மருத்துவமனைக்கு வைத்தியம் பார்க்க சென்றால் முதலில் பணம் கட்டவேண்டும் பிறகு சொல்லும் போது கட்டிக் கொண்டு இருக்க வேண்டும் போதும் கொஞ்சம் நல்லா இருக்கு வீட்டுக்கு போகலாம் என மருத்துவரிடம் சொன்னால் வேண்டாம் இன்னும் ஒருவாரம் கழித்து போகலாம் என்பார்கள் நாம் சண்டை போட்டு ஆளை விட்டால் போதும் என்ற நிலை... இதே அரசு மருத்துவமனையில் நோயாளி வைத்தியம் பார்க்க போனால் எல்லாம் நல்ல இருக்கு இந்த மருந்தை சாப்பிடுங்கள் என சொல்வார்கள் எளிதில் அங்கே இருந்து நகர மாட்டார்கள் ஒரு கட்டிலில் மூன்று நபர்கள் கூட படுத்துக் கொள்வார்கள்... அங்கே பணம் கொட்டும் இங்கே பிணம் கிட்டும்.... மொத்தத்தில் மருத்துவர்கள் சேவை செய்ய வருவதில்லை...... கோவைக்கு ஒருமுறை இந்த வாங்க்சுவை அழைத்து வாருங்கள் அப்போது தெரியும் இந்த மாணவர்களின் யோக்கிதை....
நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எத்தனை மருத்துவர்கள் விஸ்வாசமாக இருக்கிறார்கள்? சாதாரண மருந்தால் குணமாகும் வியாதிக்கு கூட அறுவை சிகிச்சை செய்கிறார்கள்.... விபத்து மூலம் அடிபட்டால் தேவையில்லாமல் பிளேட் வைக்கிறார்கள் பிறகு இரண்டு வருடம் கழித்து எடுக்க வேண்டும் என சொல்கிறார்கள் ஜனங்களை பயப்படுத்தி பணத்தை புடுங்கி விடுகிறார்கள் மருத்துவ காப்பீடு உள்ளது என்றால் கட்டணம் எகிறி விடும்..... மார்க் குறைவாக வாங்கினால் கடைசியாக பல் மருத்துவம் படிக்கலாம்.... பல் புடுங்க தெரியாத பலர் அழகு சிகிச்சை செய்து பணம் பார்க்கிறார்கள்... புதிய மாடலில் வரும் கார்களை முதலில் வாங்குவது போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் வண்டிகளை ஓட்டி விபத்து ஏற்படுத்துவது.... இவர்களுக்காக ஒரு ஆர்பாட்டம்.... எல்லாம் சரிங்க சார் போராட்டம் செய்ய பணம் கொடுத்தீங்க! அடி வாங்க பணம் தரவில்லையே அது தான் நாங்க எஸ்கேப்..
1990 காலகட்டங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவு இடம் கிடைப்பது சிரமம், நல்ல மதிப்பெண் இருந்தாலும் பணம் கொடுத்தால் தான் கிடைக்கும் அனைத்து பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இருக்கும்... பல சமயங்களில் வினாத்தாள் கசிந்து விடும் பார்த்தால் மிக மிக எளிமையாக இருக்கும்..... தேர்வு முடிந்து ஒரு மாதம் கழித்து மீண்டும் மறுதேர்வு எழுத வேண்டும் கடினமாக இருக்கும்..... இதை பார்த்த பல பெற்றோர்களின் குழந்தைகள் தான் இன்று நீட் கேட் என பல தேர்வுகள் எழுதுகிறார்கள்... பெற்றோர்களின் பிடிவாதத்தால் பல மாணவர்கள் விருப்பம் இல்லாமல் நீட எழுதுகிறார்கள்... மன அழுத்தம் பயம் மற்றும் இயலாமையால் தற்கொலை செய்கிறார்கள் இதற்கு ஒரு கோடி கேட்டு போராட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல....
சமூக ஆர்வலர் அல்லது சமூக அரக்கர்? மருத்துவ மாஃபியா? நீட் வினா தாள் கசிவு போல் கல்லூரியில் கேள்வி தாள் கசிந்தால் என்ன செய்வது? எந்த தேர்வும் நடத்த முடியாது. குலுக்கல் முறையில் மாணவர்களை தேர்வு செய்யலாமா? மத்திய அமைச்சர் மக்கள் பிரதிநிதி. பிஜேபி கட்சியினர் நலம் விசாரிக்கலாம். அமைச்சர் சமூக விரோதிகள் நலம் விசாரிப்பது சரியல்ல . நாடு முழுவதும் சிங்க பெண் போலீஸ் படை உருவாக்க வேண்டும். இந்த படையில் 5 ஆண்டுகள் பணி புரிந்தால் மட்டும் தான் அரசு பணிக்கு தேர்வு. 3 ல் 1 பங்கு பெண் போலீஸ்.
கரப்பான் பூச்சியை நசுக்க கொசுவோடு உறவாட வேண்டியதா இருக்கு? எல்லாம் காலக் கொடுமை!
யாரு கூட்டாங்க. ரொம்ப நல்லவங்க
பேசி தீர்க்க வேண்டிய பல பிரச்னைகளுக்கு போராட்டம் நடத்துவதும் அதை நிறுத்த அமைச்சரின் ராஜினாமா தான் தீர்வு என நாம் முடிவிற்கு வந்தால் மத்தியில் மட்டுமல்ல- எந்தவொரு மாநிலத்திலும் எந்த அமைச்சரவையும் இருக்காது.