டாஸ்மாக் இடம்மாற்றம் செய்ய வலியுறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டம்
அரூர்: அரூர் அருகே டாஸ்மார்க் கடையை இடமாற்றம் செய்ய வலியு-றுத்தி, டாஸ்மாக் கடை முன், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்-தினர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே இட்லப்பட்டி புதுார், அனுமந்-தீர்த்தம் - கைலாய புரம் பிரதான சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இங்கு வருவோர், டாஸ்மாக் கடைக்கு அரு-கேயும், குடியிருப்புகள் அருகே திறந்தவெளியிலும் அமர்ந்த மது குடித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில், 20க்கும் மேற்பட்ட சாலை விபத்துக்கள் ஏற்பட்டு, 3 பேர் பலியாகி உள்ளனர். எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள, டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க, மாவட்ட செயலாளர் முத்து தலை-மையில், நேற்று பகல், 12:00 மணிக்கு டாஸ்மாக் கடை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பெண்கள் உள்பட, 50க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து, கடையை இடம்மாற்றம் செய்ய வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர். அவர்களிடம், அரூர் டி.எஸ்.பி., சதீஸ்குமார், தனி தாசில்தார் ஜெயசீலன், மண்டல துணை தாசில்தார் எழில்மொழி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், 15 நாட்களுக்குள், வேறு இடத்திற்கு டாஸ்மாக் கடையை மாற்ற நட-வடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதியம், 2:00 மணிக்கு கலைந்து சென்றனர்.