இதே நாளில் அன்று
ஜூலை 23: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பக்கீர் முகமதுவின் மகனாக, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், 1951ல் இதே நாளில் பிறந்தவர் பக்கீர் முகமது இப்ராஹிம் கலிபுல்லா.
இவர், சட்டம் படித்து, 1975ல் வழக்கறிஞரானார். தொழிலாளர் சட்ட நிபுணரான இவர், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், மின்சார வாரியம் உள்ளிட்டவற்றில் வழக்கறிஞராக பணியாற்றினார். 2000வது ஆண்டு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின், ஜம்மு- - காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆனார். 2012ல், உச்ச நீதிமன்ற நீதிபதியாகி, 2016ல் ஓய்வு பெற்றார்.
கடந்த 2006ல் நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலில், ஆளும் கட்சியான தி.மு.க.,வின் முறைகேடு தொடர்பான வழக்கில், 99 வார்டுகளின் தேர்தலை ரத்து செய்தார். 2019ல், அயோத்தி நிலத் தகராறு வழக்கில், சமரச குழுவின் தலைவராக இருந்தார்.
ஜம்மு- - காஷ்மீர் மலைக் கிராம மக்களுக்காக இலவச சட்ட உதவி மையங்களை அமைத்தார். உச்ச நீதிமன்றத்தில், தான் கையாண்ட, 190 வழக்குகளில், 74 முக்கிய தீர்ப்புகளை இவரே எழுதினார்.
இவரது, 75வது பிறந்த தினம் இன்று!
மேலும்
-
நாகப்பட்டினம் - துாத்துக்குடி நான்கு வழிச்சாலை; மாற்றுவழியில் செயல்படுத்த மத்திய அரசு திட்டம்
-
ஊராட்சி குடிநீரை விற்றவர் மீது வழக்கு
-
திமுக ஆட்சியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்ட 600 வேலைகளை ரத்து செய்ய ஆலோசனை
-
மனஸ்தாபங்கள் விரைவில் சரியாகி விடும்: நிர்வாகிகள் கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு
-
கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் கலாசாரத்தை உருவாக்க வேண்டும்: டெண்டுல்கர்
-
கோர்ட் விசாரணைக்கு ஆஜரான நபர் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு