மேலப்பெருங்கரை சதுரங்கநாயகி அம்மன் கோயில் கொடியேற்றம்

பரமக்குடி: பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை கிராமத்தில் சதுரங்க நாயகி அம்மன் மற்றும் சந்தன கருப்பு சுவாமி கோயிலில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

கோயிலில் நேற்று காலை 7:35 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து விரதம் இருக்கும் பக்தர்கள் காப்பு கட்டி கொண்டனர்.

தினமும் கோயிலில் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. ஆக., 2 மாலை குத்து விளக்கு வழிபாடு நடக்கிறது. ஆக.,3 பால் குடம் எடுத்தல், அக்னி சட்டி வைபவம் மற்றும் பக்தர்கள் பூக்குழியில் இறங்க உள்ளனர். தொடர்ந்து ஆக.,4 இரவு பாலபிஷேகத் துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனர்.

Advertisement