பரமக்குடியில் துாய்மைப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கான நலத்திட்ட முகாம்
பரமக்குடி: பரமக்குடியில் துாய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடந்தது.
பரமக்குடி எம்.எல்.ஏ., கதிரவன் தலைமை வகித்து முகாமை துவக்கினார். நகராட்சி தலைவர் கருணாநிதி, கமிஷனர் தாமரை முன்னிலை வகித்தனர். அப்போது துாய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு தேவையான அரசு நலத் திட்டங்கள் சென்று சேரும் வகையில் அனைத்து துறையினரும் வந்திருந்தனர். மேலும் முதுகுளத்துார், கமுதி, அபிராமம் செயல் அலுவலர்கள் செல்வராஜ், யசோதை, மாலதி பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை பரமக்குடி நகராட்சி, முதுகுளத்துார், அபிராமம், கமுதி பேரூராட்சியினர் இணைந்து நடத்தினர். எம்.எல்.ஏ., பேசியபோது:
துாய்மைப் பணியாளர்கள் அதிகமான கலந்து கொண்டதாக தெரியவில்லை. வரும் நாட்களில் இது போன்ற முகாம்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் துாய்மைப் பணியாளர்களுக்கு மாதா மாதம் 10ம் தேதி சம்பளத்தொகை வழங்குவதாக தெரிகிறது. ஆகவே அரசு ஊழியர்கள் போல் முதல் தேதியிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.