திமுக ஆட்சியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்ட 600 வேலைகளை ரத்து செய்ய ஆலோசனை
கோவை: கோவை மாநகராட்சியில், திமுக ஆட்சியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்ட 600 வேலைகளை ரத்து செய்ய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
கோவை மாநகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலியிட வரி, தொழில் வரி, குத்தகை மற்றும் ஏல இனங்கள், வணிக வளாக கடை வாடகை உள்ளிட்ட வகைகளில் வருவாய் ஈட்டப்படுகிறது. ரூ.5,000 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதுதவிர, மத்திய - மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மழை நீர் வடிகால் கட்டுதல், சாலை அமைத்தல், பூங்கா பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்ய திமுக ஆட்சியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. சட்டசபை தேர்தலுக்கு முன் டெண்டர் கோரிய வேலைகளுக்கு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்து, மன்ற அனுமதி பெற்று, 'ஒர்க் ஆர்டர்' வழங்க வேண்டும்.
திமுக ஆட்சியில் தேர்வு செய்த வேலைகளுக்கு 20 சதவீதம் வரை கமிஷன் கொடுத்ததால், மதிப்பீடு அதிகமாக இருப்பது, டெண்டர் கோராமல் 'அட்வான்ஸ் ஒர்க்' செய்தது, தேவையே இல்லாத வேலைக்கு டெண்டர் கோரியது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு வந்தது. ஏற்கனவே டெண்டர் கோரி, மன்றத்தில் அனுமதி பெற்ற, 135 பணிகளுக்கு ஒப்பந்த நிறுவனங்களுக்கு இன்னும் 'ஒர்க் ஆர்டர்' வழங்கப்படாமல் உள்ளது.
திமுக ஆட்சியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்ட 450 வேலைகள் டெண்டர் கோரும் நிலையில் இருக்கின்றன. ஒப்பந்த நிறுவனங்களுக்கு ஒர்க் ஆர்டர் கொடுக்கும் நிலையில், 150 பணிகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் ரத்து செய்து விட்டு, அத்தியாவசியமாக தேவையானதை தேர்ந்தெடுத்து, புதிதாக மதிப்பீடு தயாரித்து டெண்டர் கோர அதிகாரிகள் வட்டாரத்தில் ஆலோசனை நடந்து வருகிறது. இதனால், 600 வேலைகளும் ரத்தாக வாய்ப்பிருக்கிறது.
இதேபோல், 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது, முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் டெண்டர் விடப்பட்ட, 500 ரோடு வேலைகள் ரத்து செய்யப்பட்டது.
மேலும்
-
கரப்பான்பூச்சி ஜனதா இயக்கம் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்; ஆர்எஸ்எஸ் குற்றச்சாட்டு
-
விருத்தாசலம் தனி மாவட்டம் பிரேமலதா எம்.எல்.ஏ., மனு
-
அரசு பள்ளியில் நுாலகம் எரிந்து சாம்பல்: திட்டக்குடியில் பரபரப்பு
-
வேளாங்கண்ணியை தொடர்ந்து தாம்பரம் ரயிலிலும் ஸ்ரீவி.,யில் ஸ்டாப்பிங் இல்லை பயணிகள் வேதனை
-
கடையை உடைத்து பொருள் திருட்டு
-
வாகன ஓட்டிகள் சிரமம்