2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,240 அதிகரிப்பு
சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 21)ஆபரண தங்கம் கிராம் 13,220 ரூபாய்க்கும், சவரன் 1,05,760 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 240 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (ஜூலை 22), தங்கம் விலை கிராமுக்கு 210 ரூபாய் உயர்ந்து, 13,430 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 1,680 ரூபாய் அதிகரித்து, 1,07,440 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 245 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரித்து, 2.45 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஜூலை 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 2,240 ரூபாய் அதிகரித்துள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலை மாற்றமின்றி கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும், கிராம் 245 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சிறப்பு வீடியோ!
இன்றைய தங்கம் விலை நிலவரங்களை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?
தினமலர் பிரத்யேக வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
சீனா தங்கத்தின் பேப்பர் மார்க்கெட்டை கிழித்து தொங்கவிட்டுவிட்டது. தங்கம் மேற்கிலிருந்து கிழக்கே ஹாங்காங் அண்ட் சிங்கப்பூர் நோக்கி பாய்கிறது. அதன் விளைவு பேப்பர் மார்க்கெட்டின் முகம் கிழிந்து தொங்குகிறது. ஹர்மஸ் ஐ இழந்த அமெரிக்காவின் பெட்ரோடாலர் மதிப்பு மேலும் சரிந்தால், தங்கத்தின் விலை இரண்டே ஆண்டில் இருமடங்கு உயரும்.
இல்லாத டிமாண்டை விலை ஏற்றி செயற்கையாக உருவாக்குகிறார்கள். விலை அதிகமாகும் என்று எண்ணி வாங்குவார்கள். இன்னும் அதிகமாகும். இன்னும் வாங்குவார்கள். நல்ல விலை எறியபின் திடீர் என்று ஒரே நாளில் சவரனுக்கு பத்தாயிரம் குறையும். விற்பவன் நல்ல லாபம் அடைவான். சொற்பமாக வாங்கியவன் விற்கமுடியாமல் திண்டாடுவான். இல்லுமினாட்டிகளின் மோசடியே தங்கம் விலை உயர்வுக்கு காரணம். நிச்சயம் விலை குறையும்.
தங்கம் விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது... குறைந்தப்பாடு இல்லைமேலும்
-
காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் இந்தியாவின் ஆட்டம் ஆரம்பம்!
-
நீட் தேர்வு பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது; அமைச்சர் நிர்மல்குமார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் (ஜூலை 25)
-
அனுஷ உற்சவம்; காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம்
-
டில்லி போராட்டத்தில் கிரிமினல் குற்றவாளிகள்; 2500 பேரை அடையாளம் கண்ட போலீசார்
-
3வது பதவிக்காலம் சிறப்பாக இருக்கும்; விளையாட்டாக சொல்கிறேன் என அதிபர் டிரம்ப் நகைச்சுவை