தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் (ஜூலை 25)

சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 13,500 ரூபாய்க்கும், சவரன், 1,08,000 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்

நேற்று (ஜூலை 24) ஒரே நாளில், தங்கம் விலை கிராமுக்கு, 270 ரூபாய் குறைந்து, 13,230 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 2,160 ரூபாய் சரிவடைந்து, 1,05,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, 240 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.40 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இன்றைய நிலவரம்

இந்நிலையில் இன்று (ஜூலை 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்


சிறப்பு வீடியோ!

வாரத்தின் கடைசி நாளில் அதிரடி விலை உயர்வு; இன்றைய தங்கம் விலையை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?

தினமலர் பிரத்யேக வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement