காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் இந்தியாவின் ஆட்டம் ஆரம்பம்!

2



நமது நிருபர்




காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது; வெண்கலம் வென்று சாதனை படைத்த இந்திய வீரர் ஜாண்டு குமாருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

2026 காமன்வெல்த் போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் ஜாண்டு குமார்(வயது 28) வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கை துவக்கி உள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை பாரா பளுதூக்கும் வீரர் ஜண்டு குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் பாராட்டு

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ''காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று, இந்தியாவின் பதக்கப் பட்டியலைத் தொடங்கி வைத்துள்ள ஜாண்டு குமாரின் செயல்பாடு அபாரமானது. அவருக்கு வாழ்த்துகள்.


உத்வேகம்




அவரது இந்தச் சாதனை, அளவற்ற வலிமை, தளராத உறுதி ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு சவாலையும் வென்று சர்வதேச அரங்கில் சிறந்து விளங்குவதன் மூலம், அவர் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளார்; எண்ணற்ற இந்தியர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளார்'' என குறிப்பிட்டுள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டு இந்தியா இன்று (ஜூலை 25) ...

ஜிம்னாஸ்டிக்ஸ்

பெண்கள் அணிகள் பைனல் தனிநபர் தகுதிச் சுற்று: பிரனதி நாயக், பிரதிஷ்டா சமந்தா, எஷிதா, நிஷ்கா, ரித்தி, நேரம்: மதியம் 2:30 மணி

'லான் பவுல்ஸ்'

பெண்கள் இரட்டையர் லீக் சுற்று, இந்தியா-மால்டா, மதியம் 3:50 மணி
ஆண்கள் ஒற்றையர் லீக் சுற்று, சோனோவால் புதுல், இரவு 7:30 மணி

குத்துச்சண்டை

ஆண்கள் (60 கிலோ) 'ரவுண்டு-32', சச்சின் சிவாச், மாலை 4:00 மணி

நீச்சல்

ஆண்கள் 200 மீ., 'பிரீஸ்டைல்' (எஸ்14) தகுதிச்சுற்று, சைதன்யா விஷ்வாஸ் குல்கர்னி, மாலை 4:15 மணி

ஆண்கள் 400 மீ., 'பிரீஸ்டைல்' லீக் சுற்று, தக் ஷன் சசிகுமார், ஆர்யன் நெஹ்ரா, மாலை 4:20 மணி

கூடைப்பந்து (3X3)

பெண்கள் 'வீல்சேர்' லீக் சுற்று, இந்தியா-வேல்ஸ், மாலை 4:35 மணி

இடம்: கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து

Advertisement