அனுஷ உற்சவம்; காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம்
மதுரை : மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில், காஞ்சி மகா பெரியவரின் அனுஷ உற்சவம் கூடல் நகர் காஞ்சி மகா பெரியவர் க்ருகத்தில் நடைபெற்றது .
மகா பெரியவா, உம்மாச்சி தாத்தா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகிற முக்தி அடைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகளின் திருநட்சத்திரமான அனுஷ உற்சவம் மதுரை கூடல் நகர், ஆனையூர் ரோடு வ.உ.சி., தெருவில் உள்ள காஞ்சி மகா பெரியவர் க்ருஹத்தில் நடைபெற்றது.
ஸ்ரீ மகாபெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு திருமஞ்சனத் திரவியப் பொடி,. மஞ்சள் பொடி, பஞ்சகவ்யம், பால், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருநீறு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து ருத்ரா அபிஷேகம் நடைப்பெற்றது. மகா பெரியவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாரதனை நடைபெற்றது.
இந்நிகழ்வினை சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் நடத்தினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும்
-
வீட்டுவசதி துறை இரண்டாக பிரிப்பு: மத்திய அரசு உத்தரவு
-
பாக்.,கின் தவறான நடவடிக்கைக்கு கற்பனைக்கு எட்டாத கடும் பதிலடி: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
-
சாலையில் பறிமுதல் வாகனங்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் திருத்தணி போலீசார் அலட்சியம்
-
இன்று இனிதாக (27.07.2026) திருவள்ளூர்
-
விதியை மீறி நள்ளிரவிலும் இயங்கும் கிரஷர்களால் அருங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் சுகாதாரம் பாதிப்பு
-
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது