நீட் தேர்வு பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது; அமைச்சர் நிர்மல்குமார்

24


மதுரை: நம்முடைய நிலைப்பாடு நீட் தேர்வு வேண்டாம் என்பது தான்; நீட் தேர்வு தேவையற்றது. நீட் தேர்வு பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

மதுரையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: நம்முடைய நிலைப்பாடு நீட் தேர்வு வேண்டாம் என்பது தான்; நீட் தேர்வு தேவையற்றது. மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அதிக சுமையை தான் கொடுக்கும். எந்த வித பயனும் இல்லை என்பதை நாம் தெளிவாக சொல்லி இருக்கிறோம்.

அரசு சார்பாக தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு, அறவழியில் நடக்கும் போராட்டங்களுக்கு முழு அளவில் பாதுகாப்பு கொடுத்து, அவர்களுக்கு தேவையான அனுமதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நீட் தேர்வு குறித்து திமுக முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் நிறைய பேசி இருக்கிறார்கள். இதை பேசக்கூடிய எந்த தகுதியும் திமுகவுக்கு கிடையாது.

அவர்கள் தான் 5 வருடமாக இதனை மோசமான சூழ்நிலைக்கு கொண்டு போனார்கள். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் நீட் தேர்வை நிறுத்துவோம் என்று சொன்னார்கள். எப்படி நிறுத்துவார்கள். அது பார்லிமென்டில் மசோதா நிறைவேற்ற வேண்டும்.

சுப்ரீம்கோர்ட் உத்தரவு, எப்படி நிறுத்துவீர்கள். தவறான நம்பிக்கையை மக்களிடத்தில் கொடுத்து இரண்டு வருடம் ஓட்டினார்கள். இப்பொழுது வந்து மேடையில் பேசுகிறார்கள். பேசக்கூடிய திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாருக்கும் கிடையாது.

நீட் தேர்வு வேண்டாம் என்பதில் நமது நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது, அதற்கான காலம் வரும் போது முதல் குரலாக கொடுப்போம். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement