'ஹாக்கி விளையாட்டை ஊக்குவிப்பதில் ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது'
மதுரை: இந்தியாவில் ஹாக்கி விளையாட்டை ஊக்குவிப்பதில், இந்திய ரயில்வே முக்கியப் பங்காற்றி வருகிறது என மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா மாநில அளவிலான ஹாக்கி போட்டி பரிசளிப்பு விழாவில் பேசினார்.
மதுரை ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான ஹாக்கி வெற்றி அணியை நிர்ணயிக்கும் அரையிறுதி இரண்டு லீக் போட்டிகள் நடத்தப்பட்டன.
ரவுண்டு லீக் அடிப்படையில், சென்னை ஏ.ஜி.ஓ.ஆர்.சி., அணி 7 புள்ளிகள் பெற்று கோப்பை வென்றது. சதர்ன் ரயில்வே இரண்டாம் இடமும், சென்னை இந்தியன் வங்கி மூன்றாம் இடமும் பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா பரிசுகள் வழங்கி பேசுகையில், 'இந்திய ரயில்வே 1928ம் ஆண்டு முதலே ஹாக்கி விளையாட்டை ஊக்குவித்து வருகிறது. வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், நவீன பயிற்சி வசதிகள் ஏற்படுத்துதல், மாநில, தேசிய அளவிலான போட்டிகளை நடத்துதல் என இந்திய ஹாக்கியின் வளர்ச்சியில் ரயில்வே முக்கிய பங்காற்றி வருகிறது.
திறமையான வீரர்களை உருவாக்குவதோடு, அவர்களுக்கு தேவையான வாய்ப்புகளையும் வழங்குகிறது' என்றார்.