கட்டடம் இங்கே... 'கரன்ட்' எங்கே...: ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவதி
சோழவந்தான்: விக்கிரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படாததால் பொதுமக்கள், பணியாளர்கள் தவியாய் தவிக்கின்றனர்.
இங்குள்ள பஸ் ஸ்டாண்ட் அருகே ரூ.1.27 கோடி மதிப்பில் புதிய சுகாதார நிலையம் கட்டி, ஓராண்டுக்கு முன் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இன்று வரை புதிய கட்டடத்திற்கு மின் இணைப்பு வழங்கவில்லை. பழைய சித்த மருத்துவ பிரிவு கட்டடத்தில் இருந்து புதிய கட்டடத்திற்கு மின்னிணைப்பு கொடுத்துள்ளனர்.
ஒருமுனை இணைப்பு, அதிக மின்பளு காரணமாக இரு கட்டடங்களிலும் மின்சார போர்டு, ஒயர்கள் எரிந்தும், பலமுறை மின்சாரம் துண்டிக்கப்படுவதும் நடக்கிறது. இதனால் ஊழியர்கள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
மருத்துவ பணியாளர்கள் கூறியதாவது: அடிக்கடி மின் துண்டிப்பு, தீ விபத்து ஏற்படுகிறது. சேதத்தை சரி செய்ய சொந்த பணத்தை செலவிடுகிறோம். எப்போது தீப்பிடிக்குமோ என்ற அச்சத்துடன் வேலை செய்கிறோம். புதிய இணைப்பு வழங்காததே இதற்கு காரணம்.
இங்கு தினமும் ஏராளமான கர்ப்பிணிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் குளிர்பதனப் பெட்டியில் இருக்கும் தடுப்பூசிகள் வீணாகின்றன. இதனால் அவசர காலங்களில் செல்லம்பட்டியில் இருந்து தடுப்பூசி வாங்கும் நிலை ஏற்படுகிறது.
பிரசவ நேரத்தில் மின்தடை ஏற்பட்டால் சமாளிக்க முடியாமல் போய்விடுகிறது. பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கையில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் விபரீதம் விளைய வாய்ப்புள்ளது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும்
-
வீட்டுவசதி துறை இரண்டாக பிரிப்பு: மத்திய அரசு உத்தரவு
-
பாக்.,கின் தவறான நடவடிக்கைக்கு கற்பனைக்கு எட்டாத கடும் பதிலடி: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
-
சாலையில் பறிமுதல் வாகனங்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் திருத்தணி போலீசார் அலட்சியம்
-
இன்று இனிதாக (27.07.2026) திருவள்ளூர்
-
விதியை மீறி நள்ளிரவிலும் இயங்கும் கிரஷர்களால் அருங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் சுகாதாரம் பாதிப்பு
-
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது