அடுத்தடுத்து மோதிய 7 வாகனங்கள் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
வாடிப்பட்டி: மதுரை துவரிமான் நான்கு வழிச்சாலையில் அடுத்தடுத்து 7 வாகனங்கள் மோதிய விபத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
நேற்று முன்தினம் இரவு விருதுநகரில் இருந்து பெங்களூருவிற்கு கற்கள் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி அதிகாலை 1:45 மணிக்கு துவரிமான் கண்மாய் நான்கு வழிச்சாலையில் வந்தபோது முன்னாள் ஓசூருக்கு பெயின்ட் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது.
இதனால் முன்னால் சென்ற அரசு, தனியார் பஸ்கள், மூன்று லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன. டாரஸ் லாரி டிரைவர் சேலம் பிரபு 35 இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார்.
நாகமலை புதுக்கோட்டை போலீசார், சோழவந்தான் தீயணைப்பு வீரர்கள், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் வெல்டிங் மெஷின், கிரேன் உதவியுடன் ஒன்றரை மணி நேரம் போராடி டிரைவரை மீட்டனர். மதுரை அரசு மருத்துவமனையில் பிரபு சிகிச்சை பெறுகிறார். இவ்விபத்தாலும், துவரிமான்- -- மேலக்கால் சந்திப்பில் பாலம் வேலை நடப்பதாலும் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
மேலும்
-
வீட்டுவசதி துறை இரண்டாக பிரிப்பு: மத்திய அரசு உத்தரவு
-
பாக்.,கின் தவறான நடவடிக்கைக்கு கற்பனைக்கு எட்டாத கடும் பதிலடி: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
-
சாலையில் பறிமுதல் வாகனங்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் திருத்தணி போலீசார் அலட்சியம்
-
இன்று இனிதாக (27.07.2026) திருவள்ளூர்
-
விதியை மீறி நள்ளிரவிலும் இயங்கும் கிரஷர்களால் அருங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் சுகாதாரம் பாதிப்பு
-
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது