'செல்பி' எடுத்தார் பிரதமர் மோடி!
புதுடில்லி: 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம், டில்லியை உலுக்கிக் கொண்டிருக்கிறது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் ஒரு பக்கம், பார்லிமென்டில் எதிர்க்கட்சியினர் அமளி மறுபுறம் என, டில்லியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கு, மாணவர் அமைப்பினர் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது.
இந்நிலையில், திடீரென ஒரு அதிரடி முடிவெடுத்தார் பிரதமர் மோடி. நாட்டு மக்களுக்கு, குறிப்பாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு, 'மெசேஜ்' சொல்ல விரும்பினார். இது போன்ற சமயங்களில், துார்தர்ஷனிலிருந்து, கேமரா சகிதமாக வந்து, பிரதமர் பேசியதை, பதிவு செய்து பின்பு வெளியிடுவர்.
ஆனால், வியாழன் இரவு, 10:15 மணிக்கு இது எதையும் பிரதமர் செய்யாமல், தன் மொபைல் போனை ஒரு, 'ஸ்டேண்டில்' வைத்து, அதன் எதிரே அமர்ந்து பேச தொடங்கிவிட்டார். இது அதிகாரிகள் மட்டுமின்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. காரணம், எந்த ஒரு பிரதமரும் இப்படி செய்ததில்லை. பொதுவாக 'டிவி' வாயிலாகவே அனைவரும் பேசுவது வழக்கம்.
இந்த வீடியோவை, இரவு 11:00 மணிக்கு மேல், தன் சமூக வலைதளங்களில் ஒன்றான, 'இன்ஸ்டாகிராம்' வாயிலாக பிரதமர் வெளியிட்டார். 'நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், கடுமையான சட்டம் கொண்டு வரப் போகிறோம்' என, அந்த வீடியோவில் தெரிவித்தார். 24 மணி நேரத்தில், இந்த வீடியோவை 30 கோடி பேர் பார்த்தனர்.
இதையடுத்து, மறுநாளும் இதே போல 'செல்பி' வீடியோவை வெளியிட்டு, இளைஞர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இந்த வீடியோவையும் கோடிக்கணக்கானோர் பார்த்தனர். 'பார்லி.,யில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் போது, அறிவிப்புகளை நள்ளிரவில் இப்படி வெளியிடுவது தவறு' என, காங்., குற்றஞ்சாட்டியது.
இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்கு பதில், இப்படி வீடியோ வெளியிட்டு, 'செல்பி' பிரதமராகிவிட்டார்; இதனால் எந்த பயனும் கிடையாது' என, மற்ற கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
இதனால் மக்களின் துன்பம் எல்லாம் நீங்கி சந்தோஷமாக வாழ்கின்றனர் நாட்டில் எல்லா பிரச்சினைகளும் முடிந்து பாலாறும் தேனாறும் ஓடுகிறது சூப்பர்
65 வருச காங்கிரஸ் ஆட்சியில் என்ன ஓடியது.