38 ஊராட்சிகளை பசுமையாக்க 25,000 மரக்கன்றுகள் வளர்ப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் ஒன்றிய அலுவலகத்தில், 38 ஊராட்சிகளில் நட்டு பசுமையாக்க, 25,000 மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

திருவள்ளூர் ஒன்றியத்தில், ஈக்காடு, அரண்வாயல், காக்களூர் உட்பட, 38 ஊராட்சிகள் அமைந்துள்ளன. அந்த ஊராட்சிகளை பசுமையாக மாற்றும் வகையில், மரக்கன்றுகள் வளர்க்க, ஊராட்சி துறையினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காக, ஈக்காடு கிராமத்தில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில், 25,000 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இதற்காக, வேம்பு, மகாகனி, புங்கன், பூவரசு உள்ளிட்ட, 12 வகையான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இக்கன்றுகள் நன்றாக வளர்ந்த பின், 38 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம பகுதிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிராமங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் வாயிலாக, கிராம சாலை, ஏரிக்கரை, நீர்வரத்து கால்வாய்கள் ஆகியவற்றின் ஓரங்களில், அந்த மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

Advertisement