மாநில மகளிர் ஹாக்கி துவக்கம்
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மாநில அளவிலான மகளிர் ஹாக்கி போட்டியை துவக்கி வைத்த பிரேமலதா எம்.எல்.ஏ., வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
விருத்தாசலம் விருதை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாநில அளவிலான மகளிர் ஹாக்கி போட்டி நேற்று துவங்கியது.
பள்ளித் தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் அருள்குமார் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் வரவேற்றார்.
கடலுார் செயின்ட் ஜோசப் முன்னாள் ஹாக்கி மாணவர்கள், விருத்தாசலம் ஹாக்கி மாணவர்கள் மற்றும் கிங் கிளப் ஆகியன சார்பில் நடந்த ஹாக்கி போட்டியில் விருத்தாசலம், திருநெல்வேலி, திருவாரூர், திருவண்ணாமலை, சேலம், வேலுார், சென்னை எஸ்.ஆர்.எம்., கல்லுாரி, மற்றும் கேரள மாநிலம் உட்பட, 12 மகளிர் அணிகள் பங்கேற்றன.
பிரேமலதா எம்.எல்.ஏ., துவக்கி வைத்து, வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவர்களுடன் ஹாக்கி விளையாண்டு மகிழ்ந்தார்.
பயிற்சியாளர்கள் செல்வம், ஜெயராஜ், முருகவேல், துரைசாமி ஆகியோர் போட்டிகளை நடத்தினர். இன்று இறுதிப்போட்டி முடிந்ததும் கோப்பை, பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
மேலும்
-
இளநிலை பட்டதாரிகள் பி.எச்டி., சேர டில்லி பல்கலை கல்விக்குழு ஒப்புதல்
-
அரசியலில் இருந்து துறவறம் பூணுகிறேன் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு
-
கல்குவாரி குட்டையில் குளித்த வாலிபர் சாவு
-
கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ளாட்சி துறை இயக்குநர் ஆலோசனை
-
காங்., மாநில தலைவரை மாத்தலனா கட்சி காலி மேலிட பொறுப்பாளரிடம் நிர்வாகிகள் புகார் வைத்திலிங்கத்துக்கு எதிராக போர்க்கொடி
-
ஆடி பொங்கல் உற்ஸவம்