நாய்கள் கருத்தடை திட்டம் விரிவாக்கம்:அமைச்சர் மதன்ராஜா
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நாய்கள் கருத்தடை திட்டத்தை விரிவாக்கம் செய்யப்படும் என குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா தெரிவித்தார்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவுலக கூட்ட அரங்கில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணியை அமைச்சர் மதன்ராஜா துவக்கி வைத்தார். கலெக்டர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார். அமைச்சர் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 1069 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படவுள்ளது. அதற்கான பணி தற்போது துவங்கியுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள், மகளிர் உள்ளிட்டோருக்கு பல்வேறு நலத்திட்டத்தில் ரூ.11 லட்சத்து 54 ஆயிரத்து 400 மதிப்பிலான நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கீழக்கரையில் ரூ.55 லட்சத்தில் நாய்கள் கருத்தடை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். ரேஷன் பொருட்கள் தடையின்றி பயனாளிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும். தமிழக முதல்வர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன் என்பதால் அதிக திரையரங்கங்களில் திரையிடப்பட்டுள்ளது. படம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து நீட் தேர்வு விவகாரத்தில் போராட்டம் நடக்கும் போது அமைச்சர்கள் ஜனநாயகன் படம் பார்ப்பது குறித்த கேள்விக்கு அமைச்சர் மதன்ராஜா பதில் அளிக்க மறுத்து விட்டார்.
--
மேலும்
-
இளநிலை பட்டதாரிகள் பி.எச்டி., சேர டில்லி பல்கலை கல்விக்குழு ஒப்புதல்
-
அரசியலில் இருந்து துறவறம் பூணுகிறேன் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு
-
கல்குவாரி குட்டையில் குளித்த வாலிபர் சாவு
-
கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ளாட்சி துறை இயக்குநர் ஆலோசனை
-
காங்., மாநில தலைவரை மாத்தலனா கட்சி காலி மேலிட பொறுப்பாளரிடம் நிர்வாகிகள் புகார் வைத்திலிங்கத்துக்கு எதிராக போர்க்கொடி
-
ஆடி பொங்கல் உற்ஸவம்