துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு முகாம்:  நகராட்சி அலுவலகத்தில் நடந்தது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், துாய்மை பணியாளர்களுக்கான சிறப்பு முகாம் நடந்தது.

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு துாய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் வாயிலாக, துாய்மை பணியாளர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் நலன், சமூக பாதுகாப்பு வாழ்வாதார மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து சிறப்பு முகாம் நடந்தது.

துாய்மை பணியாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அரசு நலத்திட்டங்களை எளிதாக பெரும் வகையில் முகாம் நடத்தப்பட்டது. நகராட்சித்தலைவர் சியாமளா, நகராட்சி கமிஷனர் நித்தியா ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தார். கவுன்சிலர்கள், அலுவலர்கள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

அதிகாரிகள் கூறியதாவது:

துாய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், அரசு சேவைகள், நலத்திட்ட முகாம் நடத்தப்பட்டது. முகாமில், தமிழ்நாடு துாய்மை பணியாளர் நலவாரியத்தில் பதிவு, சுகாதார சேவைகள், அரசு மானியம் மற்றும் அடையாள ஆவணங்கள் பெறுவதற்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.

மேலும், கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் பணியாளர்கள், கழிவுநீர் சேகரிப்பு தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள், சமூக பாதுகாப்பு உரிமைகள் வழங்கும் முகாமும் நடத்தப்பட்டது.

கழிவு சேகரிப்பாளர்களின் பதிவு, விபரம் சரிபார்ப்பு, மற்றும் 'நமஸ்தே' திட்டத்தில் இணைத்தல், சுய தொழில் துவங்க விரும்பும் தகுதியான கழிவு சேகரிப்பாளர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

கழிவு சேகரிப்பாளர்களுக்கு தனிப்பட்ட 'நமஸ்தே' அட்டை வழங்குதல் வாயிலாக, அடையாள அங்கீகாரம், அரசின் நலத்திட்டங்களை எளிதில் பெறும் வசதி குறித்து விளக்கப்பட்டது.

உலர் கழிவு சேகரிப்பு மையம் அமைக்க விரும்பும் சுய உதவிக்குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக முகாம் நடத்தப்பட்டது.

இவ்வாறு, கூறினர்.

Advertisement