ருமேனியாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிப்பு

1

நமது நிருபர்



இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ருமேனியா புக்கரெஸ்ட் பொருளாதார ஆய்வுப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் மால்டோவா, வடக்கு மாசிடோனியா, ருமேனியா ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அந்த வகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ருமேனியா சென்றார். அவர் அந்நாட்டு அதிபர் நிகோசர் டென்னை சந்தித்தார்.

அவருக்கு ருமேனியா புக்கரெஸ்ட் பொருளாதார ஆய்வுப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. பிறகு கவுரவ முனைவர் பட்டம் வழங்கும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது: அனைத்து சமூகத்தினருக்கும் நன்றி. இந்தியா மற்றும் ருமேனியா மக்களின் நட்புறவின் பிரதிபலிப்பாக 140 கோடி இந்தியர்களின் சார்பாக இந்த அங்கீகாரத்தை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

Tamil News
Tamil News
Tamil News
வாழ்வில் கல்வியே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி. இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார். இதற்கிடையே இந்திய - ருமேனிய தொழிலதிபர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், ''இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு ருமேனிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

Advertisement