வராகி அம்மனுக்கு மூல மந்திர யாகம்

வில்லியனுார்:  திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த  வாராகி மூல மந்திர யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் உள்ள மங்கள வாராகிக்கு  ஆஷாட நவராத்திரி விழா கடந்த 14ம் தேதி துவங்கியது.

நேற்று நடந்த நிறைவு விழாவில், வாராகி நவராத்திரியை முன்னிட்டு மூல மந்திர யாகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு திரவியங்களால் யாக பூஜை நடந்தது. மாலையில் அன்னை வாராகி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குதிரை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட வராகி அம்மன் வீதியுலா நடந்தது.  விழாவில் திருக்காஞ்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement