முதல்வர் பேனர் அகற்றம்: கடலுார் மாநகராட்சி அதிரடி
கடலுார்: கடலுாரில், முதல்வர் விஜயின், 20க்கும் மேற்பட்ட பேனர்கள் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
தமிழக முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம் நேற்று வெளியானது. அதையொட்டி கடலுார் மாநகரில், ஜனநாயகன் படத்தை வரவேற்கும் விதமாக த.வெ.க., அமைச்சர் ராஜ்குமாரின் ஆதரவாளர்கள் வைத்திருந்த பேனர்கள் மாநகரம் முழுவதும் வியாபித்திருந்தது.
இந்நிலையில், நேற்று மதியம் மாநகராட்சி கமிஷ்னர் கிஷன் குமார் உத்தரவின்பேரில் கடலுார் ஆல்பேட்டை முதல், அண்ணா மேம்பாலம் வரையிலும், திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் தொடங்கி திருவந்திபுரம் வரையில் இருந்த முதல்வர் விஜய், அமைச்சர் ராஜ்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களின் படங்கள் இடம் பெற்றிருந்த, பேனர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. ஆனால், சினிமா தியேட்டர் முன்பு இருந்த பேனர்கள் மட்டும் அகற்றப்படவில்லை. இதையடுத்து அனுமதியில்லாமல் பேனர் வைக்கக்கூடாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும்
-
நீட் தேர்வு பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது; அமைச்சர் நிர்மல்குமார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் (ஜூலை 25)
-
அனுஷ உற்சவம்; காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம்
-
டில்லி போராட்டத்தில் கிரிமினல் குற்றவாளிகள்; 2500 பேரை அடையாளம் கண்ட போலீசார்
-
3வது பதவிக்காலம் சிறப்பாக இருக்கும்; விளையாட்டாக சொல்கிறேன் என அதிபர் டிரம்ப் நகைச்சுவை
-
ருமேனியாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிப்பு