'சாகர் கவச்' பாதுகாப்பு ஒத்திகை: போலி பயங்கரவாதிகள் சிக்கினர்
சென்னை:கடலோர பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும், கடல் கவசம் எனும் 'சாகர் கவச்' பாதுகாப்பு ஒத்திகையில், போலீசாரிடம், பயங்கரவாதிகள் போல ஊடுருவிய போலீசார் மற்றும் அதிகாரிகள் ஐந்து பேர் சிக்கினர்.
பயங்கரவாதிகள் கடல் வழியாக ஊடுருவதை தடுக்கும் வகையில், ஆண்டுதோறும் இரு முறை 'சாகர் கவச்' எனும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. இந்த ஒத்திகை, தமிழகத்தில் நேற்று தொடங்கி இன்று மாலை 6:00 மணிக்கு முடிகிறது.
இதில், தமிழக காவல் துறையினர், மத்திய, மாநில உளவு அமைப்பினர், வருமான வரித்துறை, சுங்கத்துறை என, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின், தங்களின் பணித்திறனை சுய பரிசோதனை செய்து கொள்ளும் வகையில், பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து, கடல் மற்றும் தரை வழியாக பயங்கரவாதிகள் போல ஊடுருவி உள்ள போலீசார் மற்றும் அதிகாரிகளை பிடித்து விசாரிக்கின்றனர்.
அந்த வகையில், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு ஒன்றில் ஊடுருவிய, தமிழக காவல் துறையின் அதி தீவிர படையைச் சேர்ந்த மயில்சாமி, தேவேந்திரன், கடலோர காவல்படையை சேர்ந்த சுபம் சவுத்ரி, பிரதான் நாவிக் அதேஷ்கிரி, சுங்கத்துறை ஆய்வாளர் ககன்குமார் என, ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து, ஐந்து, 'டம்மி' வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
**
மேலும்
-
தவெக அரசை சதி செய்து கவிழ்க்க முயன்ற வழக்கு; செந்தில் பாலாஜியிடம் விசாரணை
-
நீட் எதிர்ப்பு போராட்டம்; குபீர் போராளிகளுக்கு கொண்டாட்டம்!
-
இளம் தலைமுறையினர் கேள்விக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்; மோகன் பாகவத்
-
காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் இந்தியாவின் ஆட்டம் ஆரம்பம்!
-
நீட் தேர்வு பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது; அமைச்சர் நிர்மல்குமார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் (ஜூலை 25)