நீட் எதிர்ப்பு போராட்டம்; குபீர் போராளிகளுக்கு கொண்டாட்டம்!

80



-நமது நிருபர்-




மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்று வந்து விட்டாலே, ஒரு சிலருக்கு அல்வா சாப்பிடுவது போல; புரட்சி செய்யப் புறப்பட்ட சே குவேராவின் வாரிசுகளாக, தங்களை எண்ணிக்கொண்டு புத்தாடை அணிந்து புறப்பட்டு விடுவர்.
இத்தகைய திடீர் குபீர் போராளிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பிரகாஷ் ராஜ். அடுத்தடுத்த இடத்தில் இருப்பவர்கள் சத்யராஜ், அமீர், வெற்றி மாறன், பா.ரஞ்சித், ஜோதிகா போன்றவர்கள்.

இந்த குபீர் கும்பலில், ஆண்டுக்கு ஆண்டு சில பேர் புதிதாக சேருவர்; அப்படி இந்தாண்டு சேர்ந்திருப்பவர்கள் ரேவதி, ஆன்ட்ரியா உள்ளிட்டவர்கள்.
கறுப்புப் பணம் கரை புரளும் திரைத்துறையில் இருந்து கொண்டு, அதைப்பற்றி வாயே திறக்காமல் ஊர் உலகத்துக்கு நியாய தர்மத்தை வண்டி வண்டியாக பேசும் இந்த கும்பலுக்கு கொள்கை, கோட்பாடு எதுவும் கிடையாது.

நடிக்க ஆசைப்படும் பெண்களை தங்கள் பாலியல் இச்சைக்கு பயன்படுத்துவோரை தட்டிக்கேட்க துப்பில்லை. நாட்டுக்கும் அரசுக்கும் புத்தி சொல்லிக் கொண்டிருக்கிறது இந்த கும்பல். இவர்களுக்கு இப்போது இப்போது கிடைத்திருப்பது நீட் எதிர்ப்பு போராட்டம்.

டில்லியில் போராடுபவர்கள் யார், அவர்களது பின்னணி என்ன, போராடுபவர்களுக்கு தினமும் வகை வகையான உணவு வந்து சேருவது எப்படி, போராட்டத்தில் போலீசாரை வாள் கொண்டு தாக்கியவர்கள் யார், செய்தியாளர்களை தாக்கியது யார் என்றெல்லாம் இந்த கும்பலுக்கு கவலை எதுவும் இல்லை.

தங்களுக்கு பேச ஒரு மேடை வேண்டும், பேசுவதற்கு மைக் வேண்டும், கை தட்டி ஆர்ப்பரிக்க சிலர் இருந்தால் போதும்; இன்றைய தினத்தில் விளம்பர வெளிச்சம் கிடைப்பதற்காக எதுவும் செய்ய தயாராக இருக்கிறது, இந்த திடீர் போராளிக் கும்பல். இத்தகைய குபீர் பேர்வழிகளின் உண்மை முகங்களை மக்கள் அடையாளம் கண்டு கொண்டால் தான் நாட்டுக்கு விடிவுகாலம்.


இப்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்து விட்டார். ஆனாலும் இந்த குபீர் போராளிகள் போராட்டத்தை முடித்துக் கொள்ள போவதில்லை. ஏனெனில் இவர்களின் நோக்கம் என்னவென்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

Advertisement