தவெக அரசை சதி செய்து கவிழ்க்க முயன்ற வழக்கு; செந்தில் பாலாஜியிடம் விசாரணை
சென்னை: தவெக அரசை சதி செய்து கவிழ்க்க முயன்ற வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி த.வெ.க., எம்.எல்.ஏ., இளையராஜா, 'என்னிடம் தொலைபேசியில் பேசிய சிலர், கட்சி மாறி ஓட்டளிக்க, 35 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசினர்' என, திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கில், தேர்தல் கருத்து கணிப்பு நிறுவனம் நடத்திய திருநாவுக்கரசு உட்பட, 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னணியில், செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் இருப்பதாக தகவல் வெளியானது. அவர்களை கைது செய்ய, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஜாமின்
திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில், தினமும் காலை, மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி, இரு நபர் உத்தரவாதத்தை தாக்கல் செய்ததால், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
விசாரணை
இந்நிலையில் இன்று (ஜூலை 25) செந்தில் பாலாஜியும் அவரது தம்பி அசோக் குமாரும் திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அப்போது செந்தில் பாலாஜியிடம் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தினர்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
கையெழுத்து போட வந்த செந்தில்பாலாஜிக்கு காத்திருந்த அதிர்ச்சி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
அதிமுகவை உடைத்து சதி செய்து தோற்றுப்போனவர்கள் மக்களை திசைதிருப்ப விரக்தியில் நாடகமாடுகிறார்கள்.
With the solid support of supreme court in news Delhi these crooks will be safe
ஐயா காலையில் சாப்பிடீங்களா . உடல் நலம் எப்படி இருக்கு. ஐயா மலையில் வந்துடுவீங்களா. ? விசாரணை முடிந்தது.
அதை தவிர பெரிசா ஒண்ணும் இல்லை. இப்புடி கொள்ளையடிச்சி பேரை கெடுத்துக்கிட்டு என்னதான் சாதிக்க நினைச்சான். ஆப்ஜெக்ட் டே புரியலை.
எப்படி களி திங்கதான் போறார்.அப்பறம் எதுக்கு இந்த அலப்பறை.
திருட்டு அன்பு சகோதரர்கள் ......
உண்மையிலேயே இந்த தப்பு செய்யலையின்னா நாங்க இதில் ஈடுபடவில்லை வழக்கு இது. எங்கள்மேல் வீண்பழி சுமத்தி வழக்கில் சேர்த்திருக்கிறார்கள் என்று சொல்லி வழக்கை சந்தித்து இருக்கவேண்டும்..
காலை மற்றும் மாலை கையெழுத்து போடணும். . உப்பு தின்றவன் தண்ணி குடிச்சே ஆகணும்
செய்தியின் தலைப்பை " குதிரைபெறவிவகாரம்" என்று போட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும் .
என்ன விசாரணை? எப்படி ஐயா இப்படி அஞ்சா நெஞ்சம் வந்தது என்று விசாரித்து உடல் நலனை பார்த்துக்கோங்க அய்யா என்று ஒரு அட்வைஸ்! அவ்வளவுதான்!
நாம தப்பு செஞ்சா சாமி நம்ம கண்ணை குத்தும் ..... இந்த சார் தப்பு செஞ்சு, அதை சாமி தட்டிக்கேட்டா சார் சாமி கண்ணைக் குத்திருவாரு ......