நிப்டியின் இறக்கம் தொடர சற்று கூடுதல் வாய்ப்புள்ளது
நேற்று 91 புள்ளிகள் இறக்கத்துடன் தொடங்கிய நிப்டி கணிசமான மீட்சியை சந்தித்தது. ஆனால், நாளின் இறுதியில் 126 புள்ளிகள் குறைந்து முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ம் சரிவுடன் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி100' குறியீடு குறைந்த பட்சமாக 0.55 சதவீதமும், 'நிப்டி ஸ்மால்கேப் 250' குறியீடு அதிக பட்சமாக 1.19 சதவீதமும் வீழ்ச்சியடைந்து முடிவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 2 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 19 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி ஆட்டோ' குறியீடு அதிக பட்சமாக 0.70 சதவீத உயர்வுடனும், 'நிப்டி கெமிக்கல்ஸ்' குறியீடு அதிக பட்சமாக 1.87 சதவீத சரிவுடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,387 நிறுவனங்களின் பங்குகளில் 1,155 ஏற்றத்துடனும்; 2,099 இறக்கத்துடனும்; 133 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.
நிப்டி குறுகிய மற்றும் நீண்டகால சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழே நிறைவடைந்துள்ளது. எம்.ஏ.சி.டி., சிக்னல் லைனுக்கு கீழேயும், ஆர்.எஸ்.ஐ., 45.36லிலும், ஆர்.ஓ.சி., நெகட்டிவ்வாகவும் உள்ளது.




மேலும்
-
தவெக அரசை சதி செய்து கவிழ்க்க முயன்ற வழக்கு; செந்தில் பாலாஜியிடம் விசாரணை
-
நீட் எதிர்ப்பு போராட்டம்; குபீர் போராளிகளுக்கு கொண்டாட்டம்!
-
இளம் தலைமுறையினர் கேள்விக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்; மோகன் பாகவத்
-
காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் இந்தியாவின் ஆட்டம் ஆரம்பம்!
-
நீட் தேர்வு பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது; அமைச்சர் நிர்மல்குமார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் (ஜூலை 25)