இனிமேல் கப்பல்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு; ஈரான் நிதி பயன்படுத்தப்படும் என்கிறார் டிரம்ப்

7


வாஷிங்டன்: மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றங்களால் இனிமேல் கப்பல்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க ஈரான் நிதியைப் பயன்படுத்தப் போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

அமைதி ஒப்பந்தம் முறிவு காரணமாக ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியை மூடி உள்ள ஈரான், அதன் வாயிலாக செல்லும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வாயிலாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால், ஈரானின் அணுமின் நிலையம் அல்லது பாலங்கள் மீது அமெரிக்கா வெடிகுண்டு வீசும் என அதிபர் டிரம்ப் எச்சரித்து இருந்தார்.

ஆனாலும் கப்பல்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்கிறது. தற்போது இனிமேல் கப்பல்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க ஈரான் நிதியைப் பயன்படுத்தப் போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

மறு அறிவிப்பு வரும் வரை, இனிமேல் கப்பல்கள், சரக்குகள் அல்லது அது தொடர்பான எதற்கும் ஏற்படும் அனைத்து சேதங்களும், அமெரிக்காவின் வசமுள்ள மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள ஈரான் பணத்திலிருந்து செலுத்தப்படும்.

இந்த இழப்பீடுகள் கணிசமானதாக இருக்கலாம், ஆனாலும், இதுவே நியாயமான ஒன்றாகும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கக் கட்டுப்பாட்டில் உள்ள ஈரான் சொத்துக்களிலிருந்து எந்தெந்த சம்பவங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்பதை டிரம்ப் குறிப்பிடவில்லை.

Advertisement