மேல்மலையனுார் ஒன்றிய கூட்டம்

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் ஒன்றிய குழு கூட்டத்தில் 1.44 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேல்மலையனுார் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., சரவணகுமார் வரவேற்றார்.

கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

எதப்பட்டு, மேல்வைலாமூர், மேல்செவலாம்பாடி, பெரியநொளம்பை, சாத்தாம்பாடி, பரையம்பட்டு ஆகிய கிராமங்களில் உலர்களம். எய்யில், கப்ளாம்பாடி, கோவில்புரையூர், குந்தலம்பட்டு, ஈயகுணம், மானந்தல் பகுதிகளில் ஆழ்துளை கிணறுடன், மின் மோட்டார் அமைத்தல்.

பெருவளூர், கோட்டப்பூண்டி, மேல்வைலாமூர், தேவனுார், வடவெட்டி, கெங்கபுரம், கன்னலம், ஆத்திப்பட்டு, தென்பாலை, கடலியில் சிமென்ட் சாலை.. கப்ளாம்பாடி, தாழங்குணம், கடப்பனந்தலில் பைப்லைன் அமைப்பது.

வடுகப்பூண்டியில் சிமென்ட் தளம், அவலுார்பேட்டை மகளிர் பள்ளியில் தடுப்பு சுவர், வளத்தியில் ரேஷன் கடை பணி, வி.ஏ.ஓ., அலுவலகம் , நுாலகம் பழுது நீக்கம் பார்த்தல். சமுதாய கூடத்தில் சமையல் கூடம், சுற்றுச்சுவர், பிளம்பர் பணி, கதவுகள் அமைத்தல் உள்ளிட்ட 44 பணிகள் 1.44 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

துணைச் சேர்மன் விஜயலட்சுமி முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன், ஷாகின்அர்ஷத், துணை பி.டி.ஓ., காஞ்சனா , எழுத்தர் மோகனசுந்தரம், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement