மானிய தொகை: நெசவாளர்கள் மனு 

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி தொழிலாளர்கள் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சி.ஐ.டி.யூ., தலைவர் கல்யாணசுந்தரம், செயலாளர் தட்சணாமூர்த்தி உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

அதில், ' மாவட்டத்தில் 32 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், 2500 தறிகள் இயங்குகின்றன. இதில்,3,500 பேர் பணிபுரிகின்றனர். கூட்டுறவு சங்கங்கள் நெசவாளர்களுக்கு வழங்கிய ரூ. 2,300 கூலியை தற்போது, ரூ. 2,0 00 ஆக குறைத்துள்ளனர்.

எனவே, 2,300 ரூபாய் கூலி வழங்க வேண்டும். உற்பத்தி துணிகளுக்கு மானியத் தொகை உயர்த்தி வழங்க வேண்டும்,' என தெரிவித்துள்ளனர்.

Advertisement