வாகன ஓட்டிகள் சிரமம்
ஆர்.எஸ்.மங்கலம்: திருச்சி–இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை திருப்பாலைக்குடி விலக்கில் இருந்து கொத்தியார்கோட்டை, பால்குளம் வழியாக கிழக்கு கடற்கரை சாலை திருப்பாலைக்குடி செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையும் தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் இணைப்பு சாலையாக இந்த ரோடு விளங்குவதால் வாகன பயன்பாடு அதிகளவில் உள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளதால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டில் இருபுறமும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நிலவில் 250 முறை அதிர்வு; பிரக்யான் ரோவரில் பதிவு
-
சின்னகரம் குடிநீர் குளம் சீரமைக்க கோரிக்கை
-
ஆழ்துளை கிணறு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
-
வாய்க்கால் பாதை ஆக்கிரமிப்பு கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு
-
துணை மின்நிலைய பணியை துவங்க காணையில் வலியுறுத்தி மா.கம்யூ., பேனர்
-
அரசின் கூட்டு ஆலோசனை கூட்டம் தொழில் வளர்ச்சி குறித்து விவாதம்
Advertisement
Advertisement