நிலவில் 250 முறை அதிர்வு; பிரக்யான் ரோவரில் பதிவு


சென்னை : நிலவில், 250 முறை நில அதிர்வு ஏற்பட்டதை, 'பிரக்யான் ரோவர்' பதிவு செய்துள்ளது.


இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, 2023, ஜூன் 14ல், நிலவின் தென் துருவத்திற்கு, சந்திரயான் - 3 எனும் விண்கலம் வாயிலாக, விக்ரம் லேண்டரை அனுப்பியது. 'சிவசக்தி' எனும் பகுதியில், விக்ரம் லேண்டர் தரை இறங்கியது.


அதிலிருந்து பிரிந்த, 'பிரக்யான் ரோவர்' தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளுக்கான தகவல்களை அனுப்பியது. நிலவின் மேற்பரப்பில் இருந்து 10 செ.மீ., ஆழம் வரை, வெப்ப கவசமாக செயல்படுவதும், அந்த மண்பகுதி, ஆழத்திற்கு வெப்பத்தை கடத்தாததையும் அறிவித்தது.


மண் அமைப்பில், மெக்னீசியம் தாதுக்கள் அதிகளவில் உள்ளதை உறுதி செய்தது. இதனால், நிலவு உருவான காலகட்டத்தில், மெக்னீசியம் ஒரு திரவ பிளாஸ்மாவாக செயல்பட்டிருக்கலாம் என்பதை அறிய முடிந்தது. மிக முக்கியமாக, சிவ சக்தி பகுதியில், 250க்கும் மேற்பட்ட முறை, நில அதிர்வுகள் ஏற்பட்டதையும் பதிவு செய்துள்ளது.

Advertisement