துணை மின்நிலைய பணியை துவங்க காணையில் வலியுறுத்தி மா.கம்யூ., பேனர்
விழுப்புரம்: காணையில் துணை மின்நிலையம் அமைக்கும் பணியை உடனடியாக துவங்க வலியுறுத்தி மா.கம்யூ., கட்சியினர் டிஜிட்டல் பேனர் வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அடுத்த காணை பஸ் நிறுத்தம் மற்றும் பி.டி.ஓ., அலுவலகம் எதிரில் மா.கம்யூ., கட்சி சார்பில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், காணை குப்பம் பகுதியில் துணை மின்நிலையம் அமைப்பதற்கான பணியை உடனடியாக துவங்க வேண்டும்.
தமிழக மின்சார வாரியமே, அரசு நிலத்தை துணை மின்நிலையம் அமைக்க ஒதுக்கீடு செய்தும் இன்று வரை 6 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் கட்டாமல் கால தாமதம் செய்யும் மின்சார வாரியமே உடனடியாக துணை மின் நிலையம் பணியை துவங்க வேண்டும். காணை பகுதியில் குறைந்த மின் அழுத்தம் வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெறும் அவதிக்குள்ளாகின்றனர்.
காணை குப்பத்தில் துணை மின் நிலையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு வருவாய்த்துறை, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு நில மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலத்தை கையகப்படுத்தி துணை மின் நிலையம் அமைக்கும் பணியை உடனடியாக துவங்க வேண்டும் என அச்சிடப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் பேனரால் காணை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்
-
திரவுபதி அம்மன் கோவில் விழா அமைச்சர் நேர்த்திக்கடன்
-
முதல்வர் விஜய் பட பேனர் கிழிப்புபெண்ணாடம் அருகே பரபரப்பு
-
புதுச்சேரி பெண் கொலை வழக்கில் இளம் தம்பதி கைது கடன் பிரச்னையால் கொன்று நகைகளை திருடியது அம்பலம்
-
மனைவியை தாக்கிய கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு
-
ரோடு அமைக்க ஆக்கிரமிப்புகள் அகற்றம்
-
விழிப்புணர்வு முகாம்