கரப்பான்பூச்சி ஜனதா இயக்கம் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்; ஆர்எஸ்எஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி: கரப்பான் பூச்சி ஜனதா இயக்கத்தின் போராட்டங்களின் பின்னணியில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள சக்திகள் இருக்கின்றன என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
அவரது பேட்டி;
நீட் தேர்வு பிரச்னையை தொடக்கத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பின. பின்னர் திசைமாறி சொந்த அரசியலை செய்யத்தொடங்கின. போராட்டத்திற்கு வரும் இளைஞர்களுக்கு நான் ஒன்றை சொல்கிறேன். உங்களுக்கு ஒரு விஷயம் தெளிவாகி இருக்கும்.
இந்த போராட்டங்களின் பின்னணியில் உள்நாட்டிலும், உலகளவிலும் சக்திகள் இருக்கின்றன. அந்த நாடுகள் இந்தியா, ஒரு வலிமையான மற்றும் கல்வி வளம் நிறைந்த நாடாக உருவாகுவதை தடுத்து, நம் நாட்டை அழிக்க விரும்புகின்றன.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், அதை கைவிட்டுவிட்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையான பங்கினை அளிக்க வேண்டும். இன்று ஆயிரக்கணக்கான புத்தொழில் நிறுவனங்களினால் இந்தியா ஒட்டுமொத்த உலகிற்கும் முன் மாதிரியாக திகழ்கிறது.
இளைய தலைமுறையினர் எந்த நன்மையும் செய்ய முடியாவிட்டால் பரவாயில்லை. எதையும் சீர்குலைக்காதீர்கள்.
இவ்வாறு இந்திரேஷ் குமார் கூறினார்.
கரப்பான் னா அவ்ளோ பயம்...
கரப்பான் பூச்சி கட்சி'யின் (Cockroach party) மூன்று கோரிக்கைகளும் அர்த்தமற்றவை, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவே அவை நிராகரிக்கப்பட வேண்டியவை. அவர்களின் முதல் கோரிக்கை அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டும் என்பது பற்றியது. NEET வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஊழல் அதிகாரிகளுக்கு அமைச்சர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவவோ அல்லது அவர்களை ஊக்குவிக்கவோ இல்லை என்பதால், அவரது பதவி விலகல் இதற்குத் தீர்வாகாது. அவர்களின் இரண்டாவது கோரிக்கை, தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது பற்றியது. ஆனால், அவர்களில் பலர் NEET தேர்வை எழுதவே இல்லை அல்லது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை காத்திருக்கவில்லை. மேலும், அவர்கள் தற்கொலை செய்துகொண்ட உடனேயே, அவர்களது குடும்பத்தினர் பலருக்கு அந்தந்த மாநில அரசுகளிடமிருந்து இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டது. மீண்டும் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவது, தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குச் செய்யப்படும் நேரடி அவமதிப்பாக அமையும் ஏனெனில், முதல் முயற்சியிலோ அல்லது பல முயற்சிகளுக்குப் பிறகோ வெற்றி பெற்று, தாங்கள் உண்மையான மருத்துவக் கல்வி ஆர்வலர்கள் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டால், NEET தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் மத்திய அரசிடமிருந்து தகுந்த நிதியுதவியைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள் அதுவும் அவர்கள் அதிகாரிகளிடமிருந்து மருத்துவப் பட்டங்களைப் பெறும் காலம் வரை அந்த உதவி வழங்கப்பட வேண்டும். அவர்களின் மூன்றாவது கோரிக்கை, யாருக்கும் எதிராக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யக்கூடாது என்பது பற்றியது. இதுவும் சாத்தியமற்றது ஏனெனில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களில் பலர் NEET தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களோ அல்லது எதிர்கால மருத்துவக் கல்வி ஆர்வலர்களோ அல்ல. மாறாக, அவர்களில் பலர் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது 2029 தேர்தல் வரை மோடி அரசு நீடிக்கக் கூடாது என்று விரும்பும் சுயநலம் கொண்ட செல்வாக்கு மிக்கவர்களால் பணத்திற்காக அமர்த்தப்பட்டவர்களாகவோ இருக்கலாம். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகப் பிரதமர் அறிவித்த அல்லது முன்வைத்த நடவடிக்கைகளை அனைவரும் வரவேற்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் இளம் மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டே எடுக்கப்பட்டுள்ளன. எனவே, 'கரப்பான் பூச்சி கட்சி'யைச் சேர்ந்தவர்கள் இன்றைய கூட்டத்தில் திறந்த மனதுடன் பங்கேற்க வேண்டும் அத்துடன், அமைச்சரின் பதவி விலகல் தனது கோரிக்கைகளில் ஒன்று அல்ல என்று திட்டவட்டமாகக் கூறிய சமூக ஆர்வலர் வாங்சுக்கின் (Wangchuk) அறிவுரையையும் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த கரப்பான் பூச்சி இயக்கமே மிக சமீபமாக ஆரம்பித்ததுதான், அதற்குள் வெளிநாட்டு சக்தி, தீவிரவாதம் என்கிற நாடகம் எல்லாம் வேண்டாம், இந்த போராட்டத்தின் காரணமே மத்திய அரசு தூங்கியதுதான், பிரச்சினை ஆரம்பித்தபோதே நடவடிக்கை எடுத்திருக்கணும்,
நீயேல்லாம் கருத்து எழுத வர்ரப்போ நான் வர கூடாதா...
உன்னை தான் யாரும் மதிக்கலையே ரஹீம் பாய்..
டெல்லி போலீசின் அக்மார்க் பொய் அம்பலப்படுத்திய மருத்துவமனை-மாணவர் போராட்டத்தில் மேலும் ஒரு அநீதி
இங்கு விழுந்த அடியால் லண்டன் மரியோவிற்கு மண்டை வீங்கியது
சாக்கடை, செப்டிக் டேங்க் வாழ் ஜந்துவான கரப்பான்பூச்சி பெயரை இயக்கத்துக்கு சூட்டும்போதே தெரியவில்லையா, இவர்களும் கழிப்பறை பிறவிகள் என்று?.. இந்த தேசவிரோத அன்னிய கைக்கூலி இயக்கங்களை தடை செய்யவேண்டும்.... ஓரளவு சர்வாதிகாரம், கடுமை இல்லாத அரசை எவனும் மதிக்க மாட்டான்...சீனா டியானன்மென் சதுக்கத்தில் கொடுத்த அதே வைத்தியத்தை கொடுத்தால், இனி பாரதத்தில் கும்பல் கூடி போராடும் குணம் அகலும்....ஓவர் டோஸ் ஜனநாயகம் இந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து...
இளைய தலை முறையினரை குறைவாக மதிப்பிட வேண்டாம் .விக்ரம் 1 ஏவியது இளைஞரர் தான் என்பதை மறக்கவேண்டாம்.
நம் தேச தலைவர்கள் செய்த மிகப்பெரிய தவறுகள் பல அதில் ஒரு சில:
1 நம் பாரத தேசம் மதரீதியாக பிளக்கப்பட்ட போது இங்குள்ள பாகிஸ்தான் விஸ்வாசிகளை துரத்தி அடிகாமல் விட்டது.
உ உண்மையான நமது தேச போராட்ட வரலாற்றை மறைத்தது.
௩ கடுமையான மதமாற்ற தடைசட்டம் கொண்டு வராமல் போனது.
௪ கம்யூனிஸ்ட் ஜஸ்டிஸ் பார்ட்டி திக போன்ற தேசதுரோக இயகங்களை தடை செய்யாமல் விட்டது.
௫ வங்கதேசம், பலுஜிஸ்தான், லாகூர், சிந்து, ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர், மாலத்தீவு போன்ற பகுதிகளை இராணுவ நடவடிக்கை மூலம் திரும்ப இனைக்காமல் விட்டது.
௬ அணிசேரா கொள்கையை பின்பற்றியது அசிங்கம்.
7 காங்கிரஸ் கட்சியை கலைக்காமல் பல ஆண்டுகள் நம் நாட்டை ஆளவிட்டது.
௮ ஐநா சபையில் நமக்கு கிடைத்தை நிரந்தர உறுப்பினர் வாய்ப்பை தவறவிட்டது.
௯ மாநிலங்களை மொழிவாரியாக பிரித்தது.
௧௦ கல்வியில் ஆரம்பம் முதல் கல்லூரி வரை அனைத்து பிரிவுகளிலும் நமது உண்மையான வரலாற்றை மறைக்காமல் சொல்லி கொடுத்து அதன் ஒரு பகுதியாக ஆறாம் வகுப்பு முதல் விளையாட்டு இராணுவ கல்வி மற்றும் பயிற்சியை கட்டாயம் ஆக்காமல் போனது.
௧௧ திபெத் பகுதிகளை சீனா பிடிக்கும் முன் நம் கட்டுப் பாட்டில் கொண்டு வர தவறியது.
இது போன்ற பல தவறுகளுக்கு கான தண்டனையை தான் நாம் அனுபவித்து கொண்டு வருகிறோம். நல்ல காலம் ஆர்.எஸ்.எஸ் நமது தேசதிற்கு கிடைத்த வரப்பிரசாதம் இல்லை என்றால் இன்று பாரதம் வல்லரசு இலக்கை எட்ட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும். ஜெய் ஹிந்த்.
ராமர் கோவில் உண்டியலை உடைத்து ஆட்டையை போட்டதும் கரப்பான் பூச்சி இயக்கம் ....
அப்படியா நாதஸ்...உன் குரூப் இல்லையா...அவளோ நல்லவரா நீங்க...
நாதஸ். இவர் தான் எல்லாம் தெரிந்த.ஏகாம்பரம்
உங்களுக்கு எதிரா யார் போராட்டம் செய்தாலும் வெளிநாட்டு சக்திகள்நு புருடா விட வேண்டியது... தமிழ்நாட்டுல ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போதும் இப்படி சொல்லிதானே.. கடலுக்குள் எல்லோரையும் சமாதி செய்ய பார்த்தீர்கள்மேலும்
-
நீட் தேர்வு பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது; அமைச்சர் நிர்மல்குமார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் (ஜூலை 25)
-
அனுஷ உற்சவம்; காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம்
-
டில்லி போராட்டத்தில் கிரிமினல் குற்றவாளிகள்; 2500 பேரை அடையாளம் கண்ட போலீசார்
-
3வது பதவிக்காலம் சிறப்பாக இருக்கும்; விளையாட்டாக சொல்கிறேன் என அதிபர் டிரம்ப் நகைச்சுவை
-
ருமேனியாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிப்பு