திரவுபதி அம்மன் கோவில் விழா அமைச்சர் நேர்த்திக்கடன்
கடலுார்: கடலுார் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், அமைச்சர் ராஜ்குமார் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினார். கடலுார், திருப்பாதிரிப்புலியூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 19ம் தேதி பகாசூரன் வதை நிகழ்ச்சி நடந்தது. 22ம் தேதி அம்மன் திருக்கல்யாணம், நேற்று முன்தினம் கரகத் திருவிழா, அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று மாலை தீமிதி திருவிழா நடந்தது. அமைச்சர் ராஜ்குமார் உட்பட ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று காலை 11:00 மணி்க்கு கொடியிறக்கம், மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தவெக அரசை சதி செய்து கவிழ்க்க முயன்ற வழக்கு; செந்தில் பாலாஜியிடம் விசாரணை
-
நீட் எதிர்ப்பு போராட்டம்; குபீர் போராளிகளுக்கு கொண்டாட்டம்!
-
இளம் தலைமுறையினர் கேள்விக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்; மோகன் பாகவத்
-
காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் இந்தியாவின் ஆட்டம் ஆரம்பம்!
-
நீட் தேர்வு பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது; அமைச்சர் நிர்மல்குமார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் (ஜூலை 25)
Advertisement
Advertisement