மனைவியை தாக்கிய கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே 2வது திருமணம் செய்து முதல் மனைவியை தாக்கிய கணவர் உள்ளிட்ட 7 பேர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மும்பை முருக மந்திலி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் மனைவி பாலாயி, 51; இவர்களுக்கு 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவர் வடிவேல் சொந்த ஊரான கள்ளக்குறிச்சி அடுத்த மாடூருக்கு நிலம் விற்பதற்காக வந்தார். இந்நிலையில், முதல் மனைவிக்கு தெரியாமல் மடம் கிராமத்தை சேர்ந்த ராணி, 35; என்பவரை வடிவேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
இதனையறிந்த முதல் மனைவி பாலாயி கடந்த ஜூன் 18 ம் தேதி, மும்பையில் இருந்து மாடூரு வந்தாா். அங்கு, கணவர் வடிவேலுவிடம் 2ம் திருமணம் செய்தது குறித்து கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த வடிவேல் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் விஜய், 35; பரமேஸ்வரி, 57; சக்திவேல், 58; உண்ணாமலை, 60; வெள்ளையம்மாள், 57; ராணி, 35; உள்ளிட்டோர் சேர்ந்து பாலாயியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக பாலாயி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் கணவர் வடிவேல் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
நீட் தேர்வு பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது; அமைச்சர் நிர்மல்குமார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் (ஜூலை 25)
-
அனுஷ உற்சவம்; காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம்
-
டில்லி போராட்டத்தில் கிரிமினல் குற்றவாளிகள்; 2500 பேரை அடையாளம் கண்ட போலீசார்
-
3வது பதவிக்காலம் சிறப்பாக இருக்கும்; விளையாட்டாக சொல்கிறேன் என அதிபர் டிரம்ப் நகைச்சுவை
-
ருமேனியாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிப்பு