முதல்வர் விஜய் பட பேனர் கிழிப்புபெண்ணாடம் அருகே பரபரப்பு

பெண்ணாடம், ஜூலை 25–

முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் சினிமாவிற்காக, வைக்கப்பட்ட பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படம் நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் வெளியானது. இதற்காக, ரசிகர்கள் முதல் கட்சியினர் வரை அந்தந்த பகுதிகளில் பேனர் வைத்து கொண்டாடினர்.

அதன்படி, பெண்ணாடம் அடுத்த முருகன்குடி பஸ் நிறுத்தத்தில் கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் பேனர் வைத்து கொண்டாடினர்.  

இந்நிலையில், நேற்று அதிகாலை முருகன்குடி பஸ் நிறுத்தத்தில் வைத்திருந்த 2 பேனர்கள் கிழிக்கப்பட்டதைக்கண்டு கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், பெண்ணாடம் போலீசில் புகார் தெரிவித்தனர்.

தகவலறிந்த பெண்ணாடம் போலீசார் கிழிந்த பேனர்களை அகற்றுமாறு கட்சியினரிடம் கூறினர். அதைத்தொடர்ந்து, பேனர் அகற்றப்பட்டது.

புகாரின்பேரில், பேனர் கிழித்த மர்மநபர்கள் குறித்து, பெண்ணாடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement